| 1. |
கிருபை பெற்ற
மரியே கிளர்ந்துநீ வாழ |
| |
பரமன் நித்த
முனக்குப் பலந்தரு தோழன் |
| |
|
| 2. |
அரிவை
யருக்குள் நீயே அடைந்தனை ஆசி |
| |
அஞ்சாதே
தேவதிரு அருட்சக வாசி |
| |
|
| 3. |
கருப்பவதி
யாயொரு கலைஞனைப் பெறுவாய் |
| |
பெருக்கமுடன்
ஏசென்னும் பேரது தருவாய். |
| |
|
| 4. |
மாபரமனுக்கவர்
மகனெனப் படுவார் |
| |
தாவீதின்
அரியணை தனயனா யடைவார். |
| |
|
| 5. |
இசுரவேல்
குடும்பத்தை என்றென்றும் ஆளும் |
| |
இறுதியவ்
வரசிற்கே இலையொரு நாளும். |