17 அத
17
அத்திமரத்தைச் சபித்தது
தென்பாங்கு
1. |
அத்தி
மரத்துக் கிளி - மிக |
|
அழகழகாய்ப்
பேசுங் கிளி |
|
தித்திக்கும்
செங்கனியை - அது |
|
தேடிப்பார்த்துங்
காணவில்லை. |
|
|
2. |
அத்தி
மரத்திலே - மிக |
|
அழகான
பலஇலைகள் |
|
எத்திவஞ்
சித்ததினால் - கிளி |
|
இட்ட சாபம்
பட்டதுபார். |
|
|
3. |
அத்தி
மரம்படவே - கிளை |
|
அயன்மரக்
கிளியடைந்து |
|
மெத்த
மதுரமுள்ள - கனி |
|
மிகவுண்டு
களித்ததுவே. |
|
|
4. |
அத்தி
மரந்தளிர்க்கும் - அதை |
|
அறிகுவீர்
வசந்தகாலம் |
|
இத்தரை
யின்முடிவும் - உடன் |
|
எட்டிவரும்
பைங்கிளியே! |
கிறித்துவின்
பாடுகள்
கிறித்துவின் சீவியம்
முழுவதிலும் அவருடைய பாடுகளே பாவிகட்குப் பிரதானமாகும். பாடில்லாமற் பலனில்லை என்றபடி கிறித்துவின்
பாடுகளில்லாவிடிற் பாவிகட்கு மீட்பில்லை. ஒவ்வொரு கிறித்தவனும் தன் மீட்புக்குக் காரணமான
கிறித்துவின் பாடுகளை யே இரவும் பகலும் எண்ணித் தியானித்தல் வேண்டும். இதே நோக்கத்துடன்
கிறித்துவின் பாடுகளெல்லாம் இங்குக் குறைவறப் பாடப்பட்டு இருக்கின்றன. கிறித்து மார்க்க சாரமான
அன்பு (Love),
ஊழியம் (Service),
தியாகம் (Sacrifice)
என்னும் மூன்றும் சிலுவைப் பாடுகளிலேயே ஒருங்கு திரண்டு கிடக்கின்றன. கிறித்து வின் தெய்வீகத்தையே
நம்பாத காந்தியுங்கூடச் சிலுவைத்தியானத் தினால் உலக முழுதும் நடுங்கத்தக்க வண்ணம் மேற்கூறிய
மூன்று சக்திகளையும் பெற்றிருப்பாராயின், கிறித்துவையே மெய்த் தேவனென்று வணங்குங் கிறித்தவர்கள்
அவரிலும் எத்துணையோ அதிகமாய் அச் சக்திகளையடையலா மென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
|
|
|