ப. |
|
தாவீது
ராசகுமார கெம்பீரநீ தந்த பவனித் தரிசனமே |
கோவேறு
மாகழுதை வாகனாரூட கும்பிடவந்தேம் பரிசனமே |
|
உரைப்பாட்டு |
|
தேவாதி
தேவன் பெருந்திரு நாமத்தால் வரும் |
மூவாத
ஏசு பெரும் முருகோலைச் சாமரம் |
|
முடுகியல் |
|
உடைகளை
விரித்தவ ரோசனாபாட |
மிடைதர
நெரித்திடும் மிகுசனங் கூடச் |
|
ப. எ. |
|
சாலேமின்
ராசாநற் சாந்தகுணச் செல்வன் |
சாரி செய்து சாலேம் மாநகர்க்கே |
கோலா கலத்துடன் கூட வருவதைக் |
கூறுவேம் சீயோன் குமாரத்திக்கே |
|
உரைப்பாட்டு |
|
தேவா
லயத்திற்குள் வியாபாரம் நீக்கி |
நோவாருக்குச்
சுத்தம் மேவார வாக்கி |
|
முடுகியல் |
|
பாலகர்
ஓசனா பகரவும் வேத |
பாரகர்
மாசினம் மிகுதியு மோத |
|
ப. எ. |
|
பாலகர்
வாயிற் பரமானந் தத்துதிபாரு மென்றமெய்ப் பராபரனே (தாவீது) |