|
மானிடருந் திரளாக மாணவக ரொடேகூடக் |
|
| கானமிளை
யவர்பாடக் கல்விமானுங் காணாவாறே |
|
| பானுவொரு
புயன்மேலே பாய்ந்துவரல் போலே சாலேம் |
|
| மாநகரி
லொருபவனி மன்னன்வரக் கண்டேன் நானே. |
|
| |
|
| வாகைபெற
வயவீரர் வாளெனவே ஓலை வீசி |
|
|
ஓகையுடன் இளையோரும் ஓசன்னா ஓசன்னா வென |
|
| சாகைதழை
பலபேர்கள் சாலையிடச் சாலேம் நகர் |
|
| மாகழுதை
மிசையேறி மன்னன்வரக் கண்டேன் நானே. |
|
| |
|
| காவலரார்
இவரென்று கண்டவரே கேட்டயர |
|
| தேவதிரு
வரரான தேசிகன் கிறித்தே சென்றார் |
|
| தாவிதுகு
மரனாகத் தங்கமேனி பொங்கவொளி |
|
| மாவலமை
யொடுவீதி மன்னன்வரக் கண்டேன் நானே. |
|
| |
|
|
ஓலைகரம் பிடித்துயர்த்தி ஓசன்னா ஓசன்னாவென்று |
|
|
பாலகரும் பலமாகப் பண்ணகரம் பாடிவரச் |
|
| சேலைகிளை
பாவுவழிச் சென்றனரே தேவாலயம் |
|
| மாலெனக்குள்
வளர்ந்தேற மன்னன்வரக் கண்டேன் நானே. |
|
| |
|
|
காசுபுறா வாணிகரைக் கண்டுசினங் கொண்டேயவர் |
|
| ஆசனத்தைக்
கவிழ்த்தோடி ஆச்சரியமா யடித்தார் |
|
| ஓசன்னா
வோசன்னா வென்றேஓயாச் சிறுவர் பாட |
|
| மாசனத்தின்
நடுவாக மன்னன்வரக் கண்டேன் நானே. |
|