|
மொழிநூலே யறியாதார் முற்றும் - சொல்லும் |
| முறையற்ற
சொற்களுக் குரையுண்டோ சற்றும். |
| |
| இயற்கையாம்
தென்மொழித் தன்மை - மிகச் |
| செயற்கையாய்ச்
செய்ததே ஆரியத் தன்மை. |
| |
|
இந்திய
மொழியெல்லாம் ஒன்றே - என்றால் |
|
இந்தியர்க்
கூண்மண சம்பந்த முண்டே |
| |
|
அண்மை இந்திஎளி
தென்றீர் - அந்த |
|
ஆங்கில ஒலிகளோ
எளியன கண்டீர். |
| |
|
ஆங்கிலம் போலவே
இந்தி - ஒரு |
|
ஆரியக்
கிளைமொழி யானது சிந்தி. |
| |
|
உடன்பிறந் தார்க்கெல்லாம்
அன்போ - நம |
|
துடன்பிறந் தேகொல்லும்
நோயொடு நண்போ? |
| |
|
தமிழ்நாடோ
ஒருசிறு பாகம் - என்று |
|
தள்ளாதீர் பாரதத்
தலையது வாகும். |
| |
|
பலர்இந்தி
பேசுவ தாலே - தமிழ்ச் |
|
சிலர்அதைத்
கற்றறிடுஞ் சிரமமுங் காலோ. |
| |
|
ஓநாயாட் டுக்குட்டி
நியாயம் - அறி |
|
வுள்ளவ ரெல்லாரும்
தள்ளுவர் மாதோ. |
| |
|
ஆரியங் கலப்பதி
னாலே - முற்றும் |
|
அழிந்துபோம்
தமிழ்இதை அறிவீர்இக் காலே. |
| |
|
தமிழென்றே
ஒருமொழி யுண்டோ - என்று |
|
சந்தேகிக்
குங்காலம் சமீபமா யுண்டே. |
| |
|
தமிழாஉன்
மடிகட்டிக் கொண்டு - இன்று |
|
தற்காத்துக்
கொள்உன்றன் தாய்மொழி நன்று. |