| 
    
     ப.  | 
  
  
    |   | 
      | 
  
  
    |   | 
    நானில
    முழுவதும் நம்மர சாயினும் | 
  
  
    |   | 
    நறுந்தமிழ்
    இழந்திடின் நன்மை யென்ன? | 
  
  
    |   | 
      | 
  
  
    | 
    
     உ.  | 
  
  
    |   | 
      | 
  
  
    |    1. | 
    தேனிலும்
    தெளிகிளைத் தேனிலு மினிமை | 
  
  
    |   | 
    தேவரும்
    விரும்பிடும் திவ்விய கணிமை | 
  
  
    |   | 
    நானெனத்
    தமிழ்மிகத் தழைத்திடுந் தன்மை | 
  
  
    |   | 
    தகையொடு
    பசியையுந் தணித்திடும் பணிமை | 
  
  
    |   | 
      | 
  
  
    | 
       2. | 
    
    மாணிக்க வாசகர்
    மனத்தையு முருக்கும் | 
  
  
    |   | 
    
    மதியோடு நடையையும்
    மாணவே பெருக்கும் | 
  
  
    |   | 
    
    பாணிக் கிசையுந்திருப்
    பண்ணோடு தருக்கும் | 
  
  
    |   | 
    
    பலகுல நலமுறப் பைந்தமி
    ழிருக்கும். |