| 1. |
இந்தியா
ஓர்தேச மென்றே இயம்புவார் அறியார் |
| |
முந்தியே
நம்முன்னோ ரெல்லாம் மொழிந்தார் பரத கண்டமென |
| |
|
| 2. |
இங்கிலீஷ்காரர்
பலத்தால் ஏகாதிபத்யம் |
| |
இந்தியாவில்
வந்ததின்னும் இதற்குளாகா நாடுபல |
| |
|
| 3. |
ஜாதி பாஷையொன்றே
யானால் சாரும்ஒரு தேசம் |
| |
பேதமுள்ள
பலதேசம் பிறங்கு மிந்தியா கண்டம் |
| |
|
| 4. |
சென்னை நாட்டிலுஞ்
சிறிய தேசம் எத்தனையோ |
| |
என்ன காரணத்தினாலும்
ஏற்குமோ அவை பிறபாஷை |
| |
|
| 5. |
சீனா ரஷ்யா
மிகப்பெரிய தேசமானாலும் |
| |
காணுமோ நிறம்
பாஷையில் கடுகளவுதான் பேதம் |
| |
|
| 6. |
அரசியற்கே
இந்தியாவில் ஆகும் ஒற்றுமையே |
| |
பரசு தாய்ப்பாஷை
யழியப் பார்த்துக்கொண்டிரார் தமிழர் |
| |
|
| 7. |
இந்தியப்
பொதுத்தலைமை இந்தி யரசாகும் |
| |
ஏனைய
மாகாணமெல்லாம் ஏற்குமரசு தாய்மொழியே |
| |
|
| 8. |
இந்தியா
ஒரே விதமாய் எல்லா விஷயத்திலும் |
| |
இருக்க வேண்டுமானால்
பலர்க்கே இருமை வண்ணம் பூசிவிடும். |