| |
போகுது
புகைவண்டி - இந்தப் |
|
| |
பூதலத்தில்
உள்ளவர்க்குச் சுகவண்டி |
(போகுது) |
| |
|
|
| 1. |
முன்னே ஓரி
யந்திரம்தான் - முடுகிப் |
|
| |
பின்னேயுள்ள வண்டிகளைப் பின்னி இழுத்து |
(போகுது) |
| |
|
|
| 2. |
கம்பீரமாய்
இரண்டு - இரும்புக் |
|
| |
கம்பிகள்மேல்
தங்கலின்றி விரைவாக |
(போகுது) |
| |
|
|
| 3. |
சன்னலின்
வழிக்காணும் - காட்சியை |
|
| |
நன்னயமாய்க்
கண்டுசனம் நகைத்திருக்க |
(போகுது) |
| |
|
|
| 4. |
புகையைப்
புரைவழியாய்ப் - புதிய |
|
| |
வகைவகையாய்
வெளியே வரவிட்டு |
(போகுது) |
| |
|
|
| 5. |
இனியதோர்
குழல்ஊதும் - இதற்கு |
|
| |
இனியும்
உலகில்நிகர் ஏதும் வருமோ? |
(போகுது) |
| |
|
|
| 6. |
மடமட வென்றிரைந்து
- முழங்கிக் |
|
| |
கடகட வென்று
காற்றாய்ப் பறந்தோடி |
(போகுது) |
| |
|
|
| 7. |
கடைசியில்
கார்டு இருந்து - பச்சைக் |
|
| |
கொடியை
வெளியில் காட்டத் திடமாக |
(போகுது) |
| |
|
|
| 8. |
சாமியின்
கருணையினால் - தன்னைஎ |
|
| |
ஜேம்ஸ்
வாட்ட ஜார்ஜ் ஸ்டீபன் செய்ததைச் சொல்லி |
(போகுது) |