|
4ஆம
4ஆம் பாடம்
கப்பல் பாட்டு
'முத்திநெறி அறியாத'
என்ற மெட்டு
| 1. |
கப்பலைப்
பார்! கப்பலைப் பார்! |
| |
கடலுள்ளே கப்பலைப் பார்! |
| |
தெப்பத்தேர்
ஓட்டம்போல் |
| |
தெரிகின்ற
கப்பலைப் பார்! |
| |
|
| 2. |
புத்தியுள்ள
பெரியோர்கள் |
| |
புண்ணியமாய்ச்
செய்த கப்பல் |
| |
மெத்தை
வீடு போலடுக்காய் |
| |
மிகவினிதாய்க்
காண்கிறதே! |
| |
|
| 3. |
பட்சிகளின்
இறகுகள்போல் |
| |
பலமாகப்
பாய்களுமே |
| |
உச்சியிலே
உரத்தடிக்க |
| |
ஓடுகின்ற
கப்பலைப் பார்! |
| |
|
| 4. |
விசிறுகன்ற
காற்றாலோ? |
| |
வேறான
சூழ்ச்சியாலோ? |
| |
பசியகடல்
மேலாகப் |
| |
பாய்ந்தோடிப்
போகிறதே. |
| |
|
| 5. |
அலைமேலே
தொட்டில்போல் |
| |
ஆடியாடிப்
போகிறதே |
| |
உலைமேலே
புகைபோலே |
| |
உயரத்தான்
புகைகிறதே |
| |
|
| 6. |
ஊஞ்சலிலே
இருப்பதைப்போல் |
| |
உள்ளேபல
பேர்இருக்க |
| |
நீஞ்சி
நீஞ்சி நீர்மேலே |
| |
நெடுந்தூரம்
போய்விட்டதே. |
|
|
|