இது தாய் சொல்வது
குறிப்பிட்ட மெட்டு இல்லை.
| 1.
|
குழந்தையே
வாஇங்கே - உன்னைக் |
| |
குளிப்பாட்டப்
போகிறேனே |
| |
|
| 2. |
அழுகாதே
அழுகாதே - உன்னை |
| |
அடித்திடுவேன்
பார்இப்போ |
| |
|
|
3. |
கைகாலை ஆட்டாதே
- உன் |
| |
ஐயாவைக் கூப்பிடுவேன் |
| |
|
|
4. |
குளிராது குளிராது -
நீ |
| |
கொஞ்சநேரம் பொறுத்துக்கொள்ளேன் |
| |
|
|
5. |
முதுகைக் குனிஇப்போ
- நான் |
| |
மெதுவாகத்
தேய்க்கிறேன் பார் |
| |
|
| 6. |
சோப்புப்
போட்டு உடம்பை - நான் |
| |
சுகமாகத்
தேய்க்கிறேனே |
| |
|
|
7. |
கண்ணே கண்ணை மூடு
- உன் |
| |
கண்ணெல்லாம் காந்திவிடும் |
| |
|
|
8. |
இன்னும் தலைமேலே
- நான் |
| |
இரண்டு செம்பு ஊற்றுகிறேன் |
| |
|
|
9. |
இப்போ எழுந்துவாடா
- உன் |
| |
ஈரத்தை துடைக்கவேணும் |
| |
|
|
10. |
வெளுத்த கமுசுடுத்து
- உனக்கு |
| |
வெகுநேர்த்தி
யாயிருக்கும். |