| 1. |
குச்சடுக்க
என்னுடனே கூடவேநீ வாராய் |
| |
மச்சுவீடு
கட்டிஅதில் வாழ்ந்திருக்க வாராய் |
| |
|
| 2. |
தச்சனைப்போல்
சன்னல்ஒன்று தைத்திடுவோம் வாராய் |
| |
மச்சுவீட்டுல்
பின்னாலே வைத்திடுவோம் வாராய் |
| |
|
| 3. |
ஏணியொன்று
செய்திடவே என்னுடனே வாராய் |
| |
கோணலாகச்
சார்த்தியேறிக் கூரைக்குநாம் போவோம் |
| |
|
| 4. |
குச்சாலே
கோப்பைசெய்து கொண்டபசி தீர |
| |
நிச்சமாய்ச்
சாப்பிடவே நேர்மையுடன் வாராய் |
| |
|
| 5. |
முக்கோணம்
நாற்சதுரம் முதலான வடிவம் |
| |
எக்கோணம்
ஆனாலும் எடுத்தடுக்க வாராய் |
| |
|
| 6. |
சிறப்பான
பட்டமொன்று செய்தபின்னே அதையே |
| |
பறக்கவிட்டுப்
பார்த்திடுவோம் பக்கமாக வாராய் |
| |
|
| 7. |
பெட்டிஒன்று
பெரிதாகச் செய்திடுவோம் வாராய் |
| |
தட்டுமுட்டை
அதில்வைக்கத் தானிங்கே வாராய் |
| |
|
| 8. |
கிளிக்கூடு
கட்டியதில் கிளியை வைப்போம் தம்பி |
| |
வெளிக்கோட வழியில்லாமல் நெருக்கிவைப்போம் கம்பி |