குலவொழிப்பு வழிகள்
1. குலப்பட்ட நீக்கம்
பெயர்கள். மாணவர் சேர்ப்புப் படிவங்கள், அரசினர் பதிவேடுகள் முதலியவற்றிற் குலப்பட்டங்களை நீக்குதல் வேண்டும்.
குடியரசு தலைவர் உம்பர் மன்றத் (Supreme Court) தலைமைத் தீர்ப்பாளர் (Chief Justice), தலைமை மந்திரியார், பாராளுமன்றம் என்னும் நடுவணாளுமன்றத் தலைவர் இருவர் ஆகியோர் முதற்கண் தம் குலப்பட்டத்தை நீக்கிப் பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும். பின்னர் ஒவ்வோர் உறுப்பு நாட்டிலும் அவரை யொத்த தலைமையதிகாரிகள் அவரைப் பின்பற்றலாம்.
ஆயினும், தமிழ்நாடு மூத்த நாடாதலாலும்w, திருவள்ளுவர் தோன்றி வாழ்ந்த நாடாதலாலும், இவ்வகையில் தானே ஏனை நாடுகட்கு வழிகாட்டலாம்.
2. தகுதிபற்றிக் கல்வியும் வேலையும்
மாணவர் சேர்ப்பிலும் வேலையமர்த்தத்திலும், தாழ்த்தப் பட்டவர்க்கு இன்னும் பத்தாண்டு கூட்டக்கூடிய சிறப்புச்