பக்கம் எண் :

தமிழ்நாட்டு அரசின் கடமை125

8. சூதாட்டொழிப்பு

  கிண்டிக் குதிரைப் பந்தயமும் அரசுப் பரிசுச் சீட்டும் சூதாட்டே. அரசு நடத்துவதனால் அவை நல்வினையாகா; வருவாயை நற்பணிக்குப் பயன்படுத்துவதனால் அவை அறவினையாகா. குதிரைப் பந்தயத்தில் ஒட்டமொட்டிக் கெட்ட குடும்பங்கள் எத்தனையோ பல.

பரிசுச்சீட்டின் தீமைகள்

  1. உழைப்பின்றி ஒருவன் திடுமெனச் செல்வனாதல் (உழைப்பை ஊக்காமை).
  2. மக்கட்குப் பேராசை யுண்டாதல்.
  3. செல்வரும் பிறநாட்டாரும் பரிசுபெறல்.
  4. பரிசு பெற்றவன்மீது அக்கம்பக்கத்தார்க்கு அழுக்கா றுண்டாதல்.
  5. பெரும்பாலேழைமக்கள் வாழ்நாள் முழுதும் பரிசு பெறாமை.
  6. ஒருசிலர் சம்பளம் முழுவதையும் இழந்துவிட்டு வருந்து தல்.
  7. ஒருவன் பிறருழைப்பின் பயனை அவர் விருப்பத்திற்கு மாறாக நுகர்தல்.
  8. சீட்டுத் தொலைந்தாற் பரிசுபெற வழியின்மை.
  9. வீணாக ஏக்கங் கொள்வாரின் வினை கெடுதல்.
  10. ஒழுக்கங் கெட்டவரையும் ஊக்குதல்.
  பரிசுச் சீட்டு வருமானத்தைக் கொண்டு அறப்பணி செய் யப்பட்டதெனின், கொள்ளையடித்த பொருளைக் கொண்டும் அது செய்யலாம் என்க.
 

9. மதவியற் சீர்திருத்தம்

  1. இறைவன் மக்கட்குத் தந்தை போலிருத்தலால், ஒவ்வொருவனும் தானே தன் தாய்மொழியிலேயே வழுத்தி வழிபடல் வேண்டும். கூட்டுவழிபாடாயின் வழிபாட்டு மொழி எல்லார்க்குந் தெரிந்ததாயிருத்தல் வேண்டும். வழங்காததும் விளங்காததுமான அயன்மொழியில் வேறொருவனைக் கொண்டு வழிபடின் வழிபடுவானுக்குப் பயன் படாததோடு இறைவன் விருப்பிற்கு மாறாகும்.