பக்கம் எண் :

14மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

"கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா
 வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
 அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
 உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
 செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
 எங்கணும் போகிய இசையோ பெரிதே
 பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
 நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
 இரவிடைக் கழிதற் கேதம் இல்லெனக்
 குரவரும் நேர்ந்த கொள்கையின் ‘’ (சிலப். 13 : 5-14)
"பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
 யானோ அரசன் யானே கள்வன்
 மன்பதை காக்குந் தென்புலங் காவல்
 என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
 மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே.’’ (சிலப். 20 : 72-6)
"மறைநா வோசை யல்லது யாவதும்
 மணிநா வோசை கேட்டது மிலனே
 அடிதொழு திறைஞ்சா மன்னவ ரல்லது
 குடிபழி தூற்றுங் கோலனும் அல்லன்
 இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர்
 மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
 .............................................................
 இழுக்கந் தாரா திதுவுங் கேட்டி
 உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
 புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
 ...............................................................
 இன்றவ் வேலி காவா தோவெனச்
 செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி
 நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சிநடுக் குற்று
 வச்சிரத் தடக்கை யமரர் கோமான்
 உச்சிப் பொன்முடி யொளிவளை யுடைத்தகை
 குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
 இறைக்குடிப் பிறந்தோர்க் கிழுக்க மின்மை.’’(சிலப்.23 : 31-54)
"எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற
 செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன்
 உயிர்பதிப் பெயர்த்தமை யுறுக ஈங்கென
 வல்வினை வளைத்த கோலை மன்னவன்
 செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது’’
(சிலப்.15 : 95-9)
என்று இளங்கோவடிகள் பிறர்கூற்றாகக் கூறியவை சான்றாம்.