பக்கம் எண் :

162மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

ஆய்வுரையை இந்துத் தாளில் வெளியிடுமாறு விடுக்கச் சொல்லியிருந்தார்கள். நான் மதுரைப் பண்டிதத் தேர்வு தேறியபின் பத்தாண்டு ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்ததால், என் ஆங்கிலப் பேச்செழுத்தாற்றலைப் பெரிதும் இழந்திருந்தேன். அதனால் அடிகள் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பியும் இயலாமற் போனது, இன்றும் வருந்தத்தக்கதாயுள்ளது.

  இதுகாறுங் கூறியவற்றால், சப்பானியர் நிலைமையடையும் வரை, இந்திவெறியர் வலையிற் சிக்காதும், இரு மொழித் திட்டத்தை நெகிழவிடாதும், செந்தமிழின் சீரைக் குலைக்காதும், மாணவர் வாழ்வைக் கெடுக்காதும், தமிழர் முன்னேற்றத்தைத் தடுக்காதும், வீண் பெயர் விளம்பரத்தை விரும்பாதும், இருமொழிவாயிற் கல்வியையே எல்லாரும் ஏற்பாராக.

10. நடுவணரசின் சொற்செயல் முரண்
 

  தலையைத் தடவி மூளையை யுறிஞ்சுவதுபோல், இந்தியைத் தென்னாட்டாரின் விருப்பத்திற்கு மாறாகப் புகுத்தமாட்டோம் என்று பொதுக்கூட்டங்களிற் சொல்லிக்கொண்டே, இந்தியைப் பரப்பற்குக் கோடிக்கணக்கான பொதுப் பணத்தைக் செலவிட்டுக் கொண்டும், தக்கண இந்திபரப்பற் கழகத்தை அரசியல் நிறுவனமாக்கிக் கொண்டும், இந்தி கற்குந் தென்னாட்டு மாணவர்க்குக் கல்விச் செலவை யேற்றுக் கொண்டும், நடுவணரசில் வேலை தேடுவார்க் கெல்லாம் இந்திக் கல்வியைத் தகுதியாக்கிக் கொண்டும், ஏற்கெனவே யமர்த்தப் பட்டவரையும் விரைந்து இந்தி கற்குமாறு எச்சரித்துக்கொண்டும், நடுவணரசின் ஓரிரு துறைகளை இந்தியில் நடத்திக்கொண்டும், பாராளுமன்றில் எந்த மொழியில் வினவினும் இந்தியில் விடையிறுத்துக் கொண்டும், வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களிலெல்லாம் இந்தியை வினைமொழியாக்க ஏவிக் கொண்டும், இந்திபேசா உறுப்பு நாடுகட்கெல்லாம் இந்தியில் ஓலைகள் விடுத்துக் கொண்டும், அஞ்சல் படிவங்களையெல்லாம் இந்தியிலேயே அச்சிட்டுக் கொண்டும், வடநாட்டுப் பெயர்ப் பலகைகளிலெல்லாம் ஆங்கிலத்தையகற்றி இந்தியிலேயே எழுதிக்கொண்டும், எதிர் காலத்தில் இந்திதான் இந்தியப் பொதுமொழியாயிருக்கு மென்று அடிக்கடி அறிவித்துக் கொண்டும், அனைத்திந்திய ஊழிய ஏற்பாட்டுக் குழுத்தேர்வை இந்தியிலும் எழுத விட்டுக் கொண்டும், நடுவணரசு சன்னஞ் சன்னமாக இந்தியைத்