பக்கம் எண் :

184மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

இதற்குக் கரணியங்கள்:

  1. இலங்கை ஒருகாலத்தில் தமிழகத்தொடு சேர்ந்திருந்தமை.
  2. சிங்களர் கி. மு. 550இல் அல்லது 534இல் வங்கத்தி னின்று வந்த வந்தேறிகளின் வழியினராயிருத்தல்.
  3. கி.பி. முதல் நூற்றாண்டிற் கரிகால் வளவன் பன்னீரா யிரம் சிங்களரைச் சிறைபிடித்துவந்து காவிரிக்குக் கரை கட்டினமை.
  4. யாழ்ப்பாணம் ஒரு தமிழ யாழ்ப்பாணனுக்கு மானியமாக விடப் பட்டதென்னுங் கதை பொய்யாயிருப்பினும், யாழ்ப்பாண விடுதலை அதன் குடிவாணர் பிறப்புரிமை யாயிருத்தல்.
  5. யாழ்ப்பாணம் என்னும் பெயர் தூய தமிழ்ச்சொல் லாயிருத்தல்.
  6. யாழ்ப்பாணியர் அனைவரும் தூய தமிழராயிருத்தல்.
  7. ஆங்கிலர் காலம்வரை யாழ்ப்பாணம் சிங்களத் தொடர் பின்றித் தற்சார்பு (Independent) நாடாயிருந்தமை.
  8. யாழ்ப்பாணம் தமிழ்நாட்டிற்கு மிக அணித்தாயிருத்தல்.
  9. சிங்களம் சிறு திரிமொழியாயும் தமிழ் உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழியாயு மிருத்தல்.
  10. தமிழ் முதற்கண் இலங்கையின் மூவாட்சிமொழிகளுள் ஒன்றாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தமை.
  மக்கள் பெருக்கத்தாலும் நாகரிக வளர்ச்சியாலும் அறிவியல் முன்னேற்றத்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கட் கலப்பு ஏற்பட்டுள்ளது. அறியாமை மிகுந்த நாடுகளிலும் தொழில்வளர்ச்சி இல்லாத நாடுகளிலும், அறியாமையை அகற்றவும் தொழில்களைத் தோற்றுவிக்கவும், ஒருகாலத்தில் அயல்நாட்டாரைப் பல நாடுகள் ஆவலோடு அழைத்தன; அன்பாக வரவேற்றன. அயல்நாட்டார் தாம் குடிபுகுந்த நாட்டைப் பிறந்த நாடுபோற் பேணி, அல்லும் பகலும் முக்கரணத்தாலும் அரும்பாடுபட்டு நாட்டை வளம்படுத்தி முன்னேறச் செய்தனர். ஆயின், கருமம் முடியும்வரை காலில் விழுந்து கும்பிட்டுக் கருமம் முடிந்தபின் காலை வாரியடித்தாற் போல், பல தலை முறையாகப் பதிந்து குடியூன்றித் தம் முன்னோரையெல்லாம்