பக்கம் எண் :

உலகக் கூட்டரசு191

வினைஞர்க்கு மாந்திகமும், அழிப்பு வினைஞர்க்கும் தீவினைஞர்க்கும் பேயிகமும் மிகுந்திருக்கும்.

  இங்ஙனம் பொதுவாக ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்ற வாறு, அகக்கரணமும் புறக்கரணமும் பிறப்பிலேயே மக்கட்கு அமைந்து விடுகின்றன. சிலர் பலதொழிற்குரியராகவும் பிறக்கின்றனர்.

   வளர்ப்பினாலும் சேர்க்கையினாலும் ஒரு சாரார்க்கு மனப்பான்மை மாறுவதுமுண்டு.

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
 இனத்தியல்ப தாகும் அறிவு"
(குறள். 462)

  தீயவரைத் தண்டனையாலும் கல்வியாலும் அறிவுரை யாலும் ஈகையாலும் திருத்த ஓரளவு இடமுண்டு. திருந்தாதவரைக் கொலைதான் திருத்தும்.

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
 களைகட் டதனொடு நேர்." (குறள். 550)

  மேற்கூறியதெல்லாம் தனிப்பட்டவர்க்கேயன்றி ஒரு வகுப்பார்க்குரியதன்று. ஆதலால், இறைவனே நால்வகுப்பையும் படைத்தான் என்பது ஆரிய ஏமாற்றேயன்றித் தமிழக் கொள்கையும் உலகக் கொள்கையுமன்று. நால்வகுப்பா யிருந்தது பிற்காலத்தில் ஐவகுப்பும் அறுவகுப்புமாயிற்று.

  ஒரே குடும்பத்தில், ஒருவன் அந்தணனாகவும், ஒருவன் அரசனாகவும், ஒருவன் வணிகனாகவும், ஒருவன் வேளாளனா கவும், ஒருவன் கைத்தொழிலாளியாகவும், ஒருவன் கூலிக்கார னாகவும் பிறக்கலாம்.

  சிலர் பிறப்பிலேயே பல தொழிலுக்குத் தகுதி யுள்ளவரா யிருக்கின்றனர். அதனால், காலத்திற்கும் இடத்திற்கும் தம் விருப்பத்திற்கும் தக்கவாறு, ஒரு முறையோ பல முறையோ தம் தொழிலை மாற்றிக்கொள்கின்றனர்.

  எல்லாரும் ஒரே தொழிலைச் செய்தால், ஒருவரும் வாழ முடியாது. "எல்லாரும் பல்லக்கேறினால் எவர் பல்லக்குத் தூக்குவது?" எல்லாரும் கடைக்காரரானால் எவர் சரக்கு வாங்குவது? எல்லாரும் ஆசிரியரானால் எவர் கல்விகற்பது? ஒருவருமில்லை. இதற்கு உழவுத்தொழில் ஒன்றே விலக்கு. ஏனெனின், உணவு உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அத்