தொழிலும், எல்லாரும் மேற்கொள்ளின், நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றதாயிராது. ஆதலால், எல்லாத் தொழிலரும் ஒருவருக்கொருவர் உதவும் வகையிற் கூடிவாழ வேண்டுமென்பதே இறைவன் ஏற்பாடு. ஒரு குடும்பத்தில் தாழ்ந்தவனும் பிறப்பான்; உயர்ந்தவனும் பிறப்பான். இன்ன குடும்பத்தில் இன்ன தொழிலன்தான் பிறப்பான் என்னும் யாப்புறவில்லை. ஆயின், இயற்கைத் தகுதிக் கேற்றவாறு ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டும். பொருளாசைபற்றியோ, அதிகாரவெறி பற்றியோ, இன்ப வேட்கைபற்றியோ, ஓய்வு மிகை பற்றியோ, தகாத தொழிலை மேற்கொள்ளின், தகாத நிலைமை களே நேரும். 2. உலகப் பொதுக் கூட்டுறவியற்கை யமைப்பு - நாடுகளின் தட்ப வெப்பநிலை வேறுபாடு.
- நாடுகளின் திணைநில வேறுபாடு.
- நாடுகளின் நிலைத்திணை (தாவர) வேறுபாடு.
- நாடுகளின் இயங்குதிணை (உயிரினங்கள்) வேறுபாடு.
- நாடுகளின் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், நிலக்கரி, எண்ணெய் முதலிய கனியச் செல்வ (mineral wealth) வேறுபாடு.
- நாட்டுமக்களின் செய்பொருட் சிறப்பு வேறுபாடு.
எ-டு: பெல்சியங் கண்ணாடி, இத்தாலியக் குடை, சுவிட்சர் லாந்துக் கடிகாரம், செருமனிய ஒலிப்பதிவான், செப்பீல்டு (Sheffield) வெட்டுக்கத்திகள், பாரிச இசைக் கருவிகள், அமெரிக்க இருப்புப் பாதைச் சூழ்ச்சிய வண்டிகள் (Railway Engines) - துன்பக் காலத்தில் ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டு உதவியின் தேவை.
- நாடுகளின் அறிவியல் கம்மிய (Science and Technology) வளர்ச்சி வேறுபாடு.
- போக்குவரத்து ஊர்திகளின் வேக வளர்ச்சியால் நாடுகளிடையேற்படும் நெருக்கம்.
- மக்களெல்லாரும் ஓரினம் என்னும் உணர்ச்சி பரவல்.
- ஒரு நாட்டு மக்கள் பிற நாடுகட்குச் சென்று கற்றலும் பணியாற்றலும்.
- இரு நாட்டிடை யேற்படும் போரைத் தடுக்கும் முயற்சி.
|