பக்கம் எண் :

உலகக் கூட்டரசு199

  வல்லரசுகள், நிலம் கடல் வான் ஆகிய மூவிடத்திலும் அணுக்குண்டுகளை நோட்டஞ்செய்தும், ஒத்திகை பார்த்தும், உணவு குடிநீர் மூச்சுவளி ஆகிய இன்றியமையாத மூவுட் கோளையும் நஞ்சூட்டுதல்.
 
   சுற்றுச்சார்புத் தீட்டுப்படுத்தம்
(Environment Pollution) பற்றி எத்தனையோ மாநாடுகள் நடத்திக்கொண்டு, மண்ணில் விளையும் உணவுப் பொருள்களையும், நிலத்தில் வாழும் விலங்குகளையும், நீரில் வாழும் மீன் இறால் முதலியவற்றையும், வானில் இயங்கும் காற்றையும் அதிற் பறக்கும் பறவைக ளையும், நஞ்சாக மாற்றிவருதல், எத்துணைத் துணிச்சலான மாய்மாலம்!
 
   மாந்தன் மூவிடங்களையும் தீட்டுப்படுத்திக் கொண்டு திங்களை யடையினும் செவ்வாயை யடையினும், நாகரிகனு மாகான், பண்பட்டவனு மாகான்.
 
  13. எண்ணெய் விலையுயர்வைத் தடுக்கும் ஆற்றலின்மை
 
   மண்ணெயும்
(Kerosine) கன்னெயும் (Petrol) இயற்கையாக மண்ணில் விளைவன. ஒவ்வொரு நிலப் பகுதியிலும் ஒவ்வொரு பொருள் சிறப்பாக விளைகின்றது அல்லது கிடைக்கின்றது அல்லது செய்யப்படுகின்றது. எல்லாப் பொருள்களையும் எல்லா நாட்டாரும் தம்முட் கொண்டுங் கொடுத்தும் பரிமாறிக் கொள்ளல் வேண்டும். உணவுப் பொருள் மட்டும் விளையும் நாடுகள், மண்ணெயும் கன்னெயும் இல்லாமலும் காலந்தள்ளலாம். ஆயின், அவ் வீரெண்ணெய் மட்டும் விளையும் நாடுகள் உணவுப் பொருளும் விரைவூர்திகளும் நாகரிகத் தட்டுமுட்டுகளும் இல்லாமல் வாழ முடியாது. ஆதலால், எண்ணெய் விளையும் நாடுகளெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, வரம்பின்றி மேன்மேலும் அதன் விலையை உயர்த்திக் கொண்டு போவது நேர்மையன்று.
 
 
14. ஊர்திமடக்கலை (hijacking) ஒழிக்க ஒற்றுமையின்மை
 
   குற்றஞ் செய்தவன் சட்டப்படி தண்டனையடைகின்றான். செங்கோலாட்சியில் மன்னன் மகனும் குற்றவாளியாயின் தண்டனையடைதல் வேண்டும். எத்துணை அதிகாரமும் பணக்கொடையும் அதைத் தடுக்கவியலாது. ஆயின் இக்காலத்தில் ஓர் எளிய கயவன் கடுங்குற்றஞ் செய்து சிறைத் தண்டனையேயடையினும், அவன் நண்பனான மற்றொரு கயவன் ஒரு வானூர்தியையோ தொடர்வண்டியையோ