பக்கம் எண் :

முடிவுரை213

இருப்பது இயல்பே. அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டுமே யன்றி, அவற்றையே அளவையாகக் கொண்டு அவ்வாட்சி முறையைப் புறக்கணித்தல் அறிவுடைமையாகாது. வள்ளுவர் கூட்டுடைமை எல்லா நாடுகட்கும் இனி எல்லாக் காலத்திற்கும் ஏற்றதாகும்.

  திறமைக்குத் தக்க முயற்சி; தேவைக்குத் தக்க நுகர்ச்சி. இதுவே கூட்டுடைமை. இதிற் குற்றமொன்று மில்லை.
 

3. உலகக் கூட்டரசு
 

  ஒன்றிய நாட்டினங்கள் (UN) உண்மையில் ஒன்றாத நாட்டினங்களாயிருப்பதால், உலகக் கூட்டரசு இன்றியமை யாததாகும்.

  போரையும் ஊர்திமடக்கலையும் நிறுத்தலும், உலக மக்கட்டொகையைக் குறைத்தலும், கொடுங்கோலாட்சியையும் இன மத மொழி வெறிகளையும் விலக்கலும், வறுமையையும் நோயையும் நீக்கலும், கவலையையும் துன்பத்தையும் தீர்த்தலும் உலகக் கூட்டரசால்தான் இயலும்.

  இன்று உலகமெங்கும் பரவியிருக்கும் ஒரு பெருங் கொடுந் துன்பம் மக்கட்டொகை மிகையே. அதைக் குறைக்கும் வரை, எந்தக் கட்சியாலும் எந்த நாட்டு உதவியாலும் எந்த ஐயாண்டுத் திட்டத்தாலும் எந்தப் பொதுநன்மையும் விளையாது. ஆளுங்கட்சி, தேர்தல் வெற்றியை நோக்காது, கொடிய நோய்க்குக் கடிய மருந்து போன்று, இருமகவுக் குடும்பத் திட்டத்தை உடனடியாய் நிறைவேற்றல் வேண்டும்.


4. தமிழின் தனியியல்பு

" இயற்சொற் றாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்குசொல்லே" (
தொல். எச்ச. 2)

என்று, இயல்பான தமிழ்ச்சொற்களெல்லாம் செந்தமிழ்ச் சொல்லேயென, தொல்காப்பியங் குறிக்கின்றது.
  
  ஆரியர் தென்னாடு வருமுன், தமிழ் முற்றுந் தனித் தமிழாகவேயிருந்தது. அதன்பின், தமிழ்ச்சொற்களை ஒவ்வொன் றாக வழக்கு வீழ்த்தவும் இறந்துபடச் செய்யவுமே, ஆரியச் சொற்கள் ஒவ்வொன்றாக வேண்டாது தமிழிற் புகுத்தப்பட்டன. நகம் (
OE. nxgel, OS, OHG. nagal, ON. nagl, Skt. nakha