பக்கம் எண் :

28மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

  தெய்வாட்சி யென்பது தேவனால் ஏவப்பெற்ற முன்விளம் பியர் (Prophets) ஆட்சி.

3. பண்பியல் வகை
  செங்கோலாட்சி
(Benign Government), கொடுங்கோலாட்சி (Despotic Government) , தன்னியலாட்சி (Autocracy), தன்மூப்பாட்சி (Dictatorship), முற்றதிகாரவாட்சி (Absolute Government).
4. ஆள்வார் தொகைவகை
  ஒருவராட்சி
(Monocracy) , சிலராட்சி (Oligarchy), பலராட்சி (Polyarchy) , அனைவராட்சி ( Pantisocracy).
5. கோவரசு வகை
  தனிக்கோவரசு,  அமைச்சுக்  கோவரசு 
(Limited Monarchy),     நாடாளு (பாராளு) மன்றக் கோவரசு (Parliamentary Monarchy).
6. பால்வகை
  ஆடவராட்சி
(Androcracy), பெண்டிராட்சி (Gynaecocracy, Gynocracy).
7. உரிமை வகை
  தன்னரசு
(Home Rule), வேற்றரசு (Xenocracy).
8. ஆட்சிமுறை வகை
  குடியரசு
(Democracy) , மக்களாட்சி (Rupublic).
9. ஆட்சியமைப்பு வகை
  ஒன்றியலாட்சி
(Unitary Government), கூட்டாட்சி (Federal Government)
10. அரசு நிலைமை வகை
  பேரரசு
(Imperialism), சிற்றரசு (Feudalism).
11. உடைமை வகை
  தனியுடைமை  யாட்சி 
(Capitalism).   கூட்டுடைமை  யாட்சி  (Socialism), கட்டுடைமை யாட்சி (Fascism), நாட்டினவுடைமை (Nazism).
12. அதிகாரி வகை
  அதிகாரியராட்சி
(Bureaucracy), உடைமையோராட்சி (Timocracy).