பக்கம் எண் :

முன்னுரை31

7. கூட்டுடைமை வகைகள்

1. உடன்புரட்சிக் கூட்டுடைமை. இது முனைந்த போராடியர் கொள்கை.
2. படிமுறைப் புரட்சிக் கூட்டுடைமை. இது மட்டான போரா டியர் கொள்கை.
3.வள்ளுவர் கூட்டுடைமை. இது பல்லார்க்கும் எக் காலத்திற் கும் ஏற்றதாகும். இதன் விளக்கத்தை நூலுட் காண்க.

8. பொதுவுடைமை (Communism) என்னும் பெயர் பொருந்தாமை

  இது  மனைவி  தவிர  மற்றெல்லாவற்றையும்  பொதுவாகக்  கொண்டு, எல்லாரும்   தத்தமக்கியன்றவாறு  பணிசெய்து  ஏற்றவாறு  உண்டுடுத்து, விரும்பியவாறு   பொருள்களைப்   பயன்படுத்தி,   சிறிதுந்    தமக்குப் பணநடமாட்டமின்றி ஒருங்கே கூடி வாழும் குடும்ப அல்லது கூட்டுக்குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை யென்று பெயர் பெறத்தக்கது.

9. கூட்டுடைமையே குடியரசின் முதிர்நிலை


  கூட்டுடைமை யாட்சி இந் நூற்றாண்டிற் புதியதாய்த் தோன்றியதனாலும், இரசிய சீனக் கூட்டுடைமை யாட்சிகளிற் சில குறைபாடுகளிருப்பதனாலும், தனியுடைமை யாட்சிகள் பெரும்பான்மையாயிருப்பதனாலும், கூட்டுடைமை யாட்சி  குடியரசன்றென்றும்,  அதிற்  செல்வர்  மட்டுமன்றிப்   பிறரும் உரிமையிழப்பரென்றும்,   தவறான  கருத்து,   பொதுவாக   மக்களிடை யிருந்துவருகின்றது.

  நோயும்  போரும்  நீங்கி மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சிப் பெருகியுள்ள இக்காலத்தில்,    வேலையில்லாத்     திண்டாட்டமும்     உடலுள்ளவரை கடல்கொள்ளாக் கவலையும் தீரும் ஒரே வழி கூட்டுடைமை யாட்சியே.

  ஒரு  குடும்பத்திற்  பிறந்த  பிள்ளைகட்கெல்லாம்  ஊணுடை  யுறையுள் அளிக்கத்  தந்தை  கடமைப்பட்டிருப்பது  போன்றே, ஒரு நாட்டிற்  பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இரசிய சீனக் கூட்டு டைமைகள் முதன் முதலாகத் தோன்றியதனால், அவையே அளவைநிலையென்றும், சீர்திருத்தத்திற்குச் சிறிதும் இடந்தரா வென்றும், கருதுவது தவறாகும்.

   இனி,  ஆட்சிமுறையில்  இரசியாவைப்  பின்பற்றினால்  இரசியாவிற்கும், சீனத்தைப் பின்பற்றினாற் சீனத்திற்கும்.