6 | மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை |
கொடிகள் தழைக்கும் பாலை யென்னும் நிலையில்லாத நிலமாக மாறும். நிலையானவும் நிலையில்லாதனவுமாகிய இவ் வைவகை நிலமும், இலக்கணத்தில் ஐந்திணை யெனப்படும். முதற்காலத்தில், குறிஞ்சிநிலத்தாரான குறவர் வேட்டை யாடலும், முல்லைநிலத்தாரான ஆயர் அல்லது இடையர் ஆடுமாடு மேய்த்தலும், மருதநிலத்தாரான உழவர் பயிர் விளைத்தலும், நெய்தல் நிலத்தாரான பரவர் கடல்படு செல்வந் தேடலும், பாலைநிலத்தாரான எயினர் கொள்ளையடித்தலும் ஆகிய ஒவ்வொரு தொழிலையே சிறப்பாகச் செய்யும் ஒவ்வொரு வகுப்பாராகவே யிருந்தனர். நெசவு, கட்டடம், தச்சு, சலவை, முடிதிருத்தம், தோல் வினை முதலிய துணைவினைகளை, ஒவ்வொரு வகுப்பாரும் தாமே எளியமுறையிற் செய்துகொண்டனர். இங்ஙனம் எவ்வகை வகுப்பு வேறுபாடுமின்றி ஒவ்வொருவரும் எல்லா வினை களையுஞ் செய்து கொள்ளக்கூடிய நிலைமையை, இன்றும் நீலமலைக் கோத்தரிடைக் காணலாம். குடியிருப்புகள் குறிஞ்சிநிலத்திற் குறிச்சி, சிறுகுடி யென்றும், முல்லை நிலத்திற் பாடி, சேரி யென்றும், மருத நிலத்தில் ஊர் என்றும், நெய்தல் நிலத்தில் துறை, குப்பம் என்றும், பாலைநிலத்தில் குடிக்காடு, நத்தம் என்றும் பெயர் பெற்றிருந்தன. இவ் வழக்கு முதன்முதல் கடல்கொண்ட பாண்டிநாட்டில் எழுந்தது. அங்கிருந்தவூர்கள் ஆயிரக் கணக்கினவாக இருந் திருத்தல் வேண்டும். பழம்பாண்டிநாடு முற்றும் முழுகிய பின்பும், திணைநிலை மாறித் திணைமயக்கம் ஏற்பட்ட பின்பும் ஐந்திணைக் குடியிருப்பும் மரபு நோக்காது மக்கள் விருப்பப்படி ஊரென்று பெயர்பெற்ற பின்பும், ஊரீற்றுப் பெயர் கொண்ட வூர்கள் இற்றைப் பாண்டி நாட்டினுஞ் சோழநாட்டில் மிகுதியா யிருத்தல், திரவிடரின் முன்னோர் வட மேலை வெளிநாடுகளினின்று இந்தியாவிற்கு வந்ததற்குச் சான்றென்று, பேரா. தி. (T.) பால கிருட்டிணன் நாயர் சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியிதழில் (Journal of the Madras University), திரவிடத் தோற்றப் புதிர் (Problem of Dravidian Origins) என்னுங் கட்டுரைத் |
|
|