பக்கம் எண் :

தமிழ்நாட்டு அரசின் கடமை63

2

தமிழ்நாட்டு அரசின் கடமை


1. உழவுத்தொழிலை ஊக்கல்


  திங்களை யடைந்து திரும்பிவரினும், நிலத்திலும் நீரிலும் வானிலும் ஒருநிகராய்ச் செல்லும் விரைவூர்தியைப் புனையினும், உயிர்வாழ்விற் கின்றியமையாத உணவை விளைக்கும் உழவனைப் போன்ற பொதுநலத் தொண்டன் ஒருவனுமில்லை.


"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
 உண்டி முதற்றே யுணவின் பிண்டம்."
(புறம். 18)

"சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
 உழந்தும் உழவே தலை."
(குறள். 1031)

"உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாது
 எழுவாரை யெல்லாம் பொறுத்து."
(குறள். 1032)

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
 தொழுதுண்டு பின்செல் பவர்."
(குறள். 1033)

"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
 உழவிடை விளைப் போர்."
(சிலப். 10 : 149-50)

"காப்பாரே வேளாளர் காண்."
(தனிப்பாடல்)

"வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்." (திரிகடுகம் 12)
"உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு." (நல்வழி. 12)

  வேளாளன், வணிகன், அரசன், அந்தணன் என்பதே, இயற்கையான வரலாற்று முறைப்பட்ட நால்வகுப்பு வரிசை. நாகரிகம் முதிர்ந்து அறிவு வளர்ச்சி யேற்பட்ட பிற்காலத்தில் தமிழ்ப் பொருளிலக்கண நூலார் கிளவித்தலைவரைத் தொழி லடிப்படையில் நாற்பாலாக வகுக்கும்போது, அறிவாற்றல்,