பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்1

1
மிகுமிடங்கள்

அல்வழி / எழுவாய்த்தொடர்
1

     குறிது = விளக்குறிது
விள
     சிறிது
நுண +
     தீது
அத
     பெரிது
  • விள என்னும் சொல்லின் இறுதியில் 'அ' என்னும் உயிர் எழுத்து உள்ளது.
    'ள'என்னும் எழுத்து இருப்பதாகக் கருதக் கூடாது. எனவே, இஃது
    அகரத்தை ஈறாக உடைய சொல். அதேபோலக் குறிது எனும் சொல்லில் 'க்'
    என்பதே முதல் எழுத்து என்பது அறிக.

  • இந்நூலின் பிற இடங்களில் எடுத்துக்காட்டப்படும் சொற்களை இவ்வண்ணமே
    நோக்குக.

  • விள, நுண, அத என்பன மரத்தின் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள்.

  • விளக்குறிது என்பதற்கு விள மரம் குட்டையாக இருக்கின்றது என்பது
    பொருள்.


  • இஃது எழுவாய்த் தொடர்.


  • அஃறிணைப் பெயர் முதல் சொல்லாக நின்று வல்லெழுத்து
    வந்து எழுவாய்த் தொடராக அமையுமானால் ஒற்று மிகும்.


  • குறிது என்பதில் கு வல்லெழுத்து, வல்லெழுத்தின் வருக்கம் எது வந்தாலும்
    (க, கா, கி, கீ, கு, கூ முதலாயின) ஒற்று மிகும் என்பது அறிக.

  • உயர்திணைப் பெயர் முதல் சொல்லாக நின்றாலும் ஒற்றெழுத்து மிகும்.