பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்24

உம்மைத்தொகை / அல்வழி
9

உவா + பதினான்கு = உவாஅப் பதினான்கு
இரா + பகல் = இராஅப் பகல் (அகரப் பேறு)
          தொல் எழுத்து நூற்பா : 223
நிலா + கதிரவன் = நிலாஅக்கதிரவன்

பண்புத்தொகை / அல்வழி
10

அரா + பாம்பு = அரா அப் பாம்பு
(அரவு ஆகிய பாம்பு)
அரா + குட்டி = அராஅக் குட்டி (அரவு ஆகிய குட்டி)
     - அரவினது குட்டி என ஆறாம் வேற்றுமைத்
     தொகையாகவும் வரும்.

தடா* + சட்டம் = தடாஅச் சட்டம் (தடாவாகிய சட்டம்)

*ஆங்கில எழுத்துக்களின் தமிழோசை

மிகாவிடங்கள்

வினைமுற்றுத் தொடர்
11

          குதிரைகள் = உண்ணா குதிரைகள்
உண்ணா + செந்நாய்கள் ( குதிரைகள் உண்ணா)
          தகர்கள்
          பன்றிகள்