ச் த் ப் மிகுதலும் மிகாமையும் | 88 |
- நிலைமொழி உயர்திணையாயின் 4-ஆம் வேற்றுமைத் தொகையில் வல்லெழுத்து
மிகாது.
- நிலைமொழி உயர்திணையாயின் 6-ஆம் வேற்றுமைத் தொகையில் வல்லொற்று
மிகாது.
- ஆகாரம் மற்றும் வன்தொடர் குற்றியலுகரம் ஆகிய ஈறுகளைத் தவிரப் பிற
ஈறுகளைக்கொண்ட உம்மைத் தொகையில் மிகுதல் இல்லை.
- வினைத்தொகையில் வலி மிகுதல் இல்லை.
- மென்தொடர்க் குற்றியலுகரத்தினைக் க, ச, த, ப, வருக்க முதலெழுத்துக்கள்
தொடரும்போது நிலைமொழிகள் இடப்பொருளாயின் மிகும்;காலப்பொருளாயின்
மிகாது.
- நிலைமொழி வருமொழி இரண்டும் வடசொற்களாய் இருப்பின் வல்லெழுத்து
மிகாது. (ஆதிபகவன் / தேசபக்தி )
- நிலைமொழி மட்டுமோ வருமொழி மட்டுமோ வடசொல்லாய் இருப்பினும் மிகாது.
(கோஷ்டி பூசல் / அறுவை சிகிச்சை)
|
|
|
|