பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்87

எடுத்துக்காட்டுக்கள் காணமுடியவில்லை ) முதலான எழுத்துக்களை ஈறாக உடைய
சொற்களைத் (இரு திணைகளிலும்) தொடர்ந்து க, ச, த, ப, வருக்க எழுத்துக்கள்
நின்று எழுவாய்த் தொடராகச் சொற்கள் தொடருமானால் வல்லெழுத்து மிகும்.

  • இகர ஈற்றினையுடைய நிலைமொழிச் சொற்கள் உயர்திணையாயின் வல்லெழுத்து
    மிகாது.


  • ஐகாரம் மற்றும் யரழ ஒற்றெழுத்துக்கள் ஆகியனநிலைமொழியின் ஈறாக
    இருதிணைகளிலும் நின்று அவற்றைக் க, ச, த, ப வருக்க வருமொழிச் சொற்கள்
    தொடருமானால் வல்லொற்றுக்கள் மிகா.
  • இகர ஈற்றினையுடைய நிலைமொழிச் சொற்கள் உயர்திணையாயின் வல்லெழுத்து
    மிகாது.


  • ஐகாரம் மற்றும் யரழ ஒற்றெழுத்துக்கள் ஆகியன நிலைமொழியின் ஈறாக
    இருதிணைகளிலும் நின்று அவற்றைக் க, ச, த, ப வருக்க வருமொழிச் சொற்கள்
    தொடருமானால் வல்லொற்றுக்கள் மிகா.
2- ஆம் வேற்றுமைத்தொகை குறித்த கூடுதல் விளக்கம்
  • 2- ஆம் வேற்றுமை தொகை என்றும், 2- ஆம் வேற்றுமை உருபும் பயனும்
    உடன்தொக்க தொகை என்றும் இரண்டு தொகைகள் உண்டு. இம்முறை அகர,
    ஆகார, இகர எனும் நிலைமொழிகளின் எல்லா ஈற்றுச்சொற்களுக்கும் பொது;
    அதுபோல்3-ஆம், 4-ஆம் என வரும் ஆறு வேற்றுமைகளுக்கும் பொது.


  • பொதுவாக 2-ஆம் வேற்றமைத் தொகையில் வல்லெழுத்து மிகாது என்பர்.


  • அவ்வாறாயின் 2-ஆம் வேற்றுமை உருபும் பயனும்உடன்தொக்க தொகையில்
    மிகும் என்பதனை அறியவேண்டும்.

  • ஆகாரம், முற்றியலுகரம் மற்றும் யகரம் ஆகிய ஈறுகளையுடைய
    நிலைமொழிகளில், 2-ஆம்வேற்றுமைத் தொகையாயின் மிகும்; அதேபோல்
    நிலைமொழி உயர்திணையாயின் மிகும்; இவை விதிவிலக்குகள்.