பக்கம் எண் :

11

 
  (அ) ஐயா,
தங்கள் 23.06.99 தேதியிட்ட விளம்பரத்தைப் பத்திரிக்கையில் பார்த்தேன்.
(ஆ) அன்புள்ள தங்கைக்கு,
நலம், உன் நலம் அறிய விருப்பம்.
(இ) இப்படிக்கு,
க. குணசீலன்
(ஈ) தங்கள் உண்மையுள்ள,
வே. தமிழ்மணி
 
1.1.20 முகவரியைக் கிடக்கை வரிசையில் தரும்போது பெயர், பதவி,
நிறுவனம், வீட்டு எண், தெரு போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும்
அடுத்து (ஒ.நோ. 1.2.2)
 
  டாக்டர் அகிலாண்டம், குழந்தை நல மருத்துவர்,
56 வடக்கு மாசி வீதி, மதுரை.
 
1.1.21 தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது
பெயரை அடுத்து
 
  (அ) வேணுகோபால், நா.
(ஆ) பொதியவெற்பன், வே.மு.

(துணை நூற்பட்டியலில் பெயரை அடுத்துக் கால்புள்ளி இடுவதில்லை. காண்க:
அடிக்குறிப்பும் துணைநூற்பட்டியலும் 3.1.1)
 
1.1.22 பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில்
 
  (அ) டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை பி.ஏ., பி.எல்., டி.லிட்.
(ஆ) முனைவர் பெ. இளங்கோவன் எம்.ஏ., டிப். இந்தி, டிப். வங்காளம்.
 
1.1.23 மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும் ஆண்டுக்கும்
இடையில் (ஒ.நோ. 1.2.1)
 
  மார்ச்சு 23, 1999