1.1.14 விடையளிக்கும்போது விடையின் ஒரு பகுதியாக வரும் வினாவை அடுத்து |
| (அ) இது என்ன? இதுவா, இது ஒரு புதுமாதிரிப் பேனா. (ஆ) நீங்கள் ஊருக்கு எப்படிப் போவீர்கள்? எப்படிப் போவது, நடந்துதான். |
1.1.15 உணர்ச்சியைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து |
| (அ) சே, என்ன பிழைப்பு இது? (ஆ) ஆ, என்ன கோரம்! (இ) ஐயோ, வலி தாங்க முடியவில்லையே! |
1.1.16 வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ‘ஆமாம்’, ‘இல்லை’, ‘ஓ’, ‘ஓகோ’ போன்ற சொற்களை அடுத்து |
| (அ) ஆமாம், நான் தமிழ் மாணவன். (ஆ) இல்லை, நான் ஊருக்குப் போகமாட்டேன். (இ) ஓ, நீங்கள் தாராளமாக ஆங்கிலத்தில் பேசலாம். (ஈ) ஓகோ, நீங்கள்தான் இந்தக் காரியத்தைச் செய்தவரா? |
1.1.17 இரு வினாக்களுக்கு இடையில் வரும் ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்து |
| இது படகா, இல்லை, மிதக்கும் வீடா? |
1.1.18 விளிக்கும் சொற்களை அடுத்து (ஒ. நோ. 8.1.5) |
| (அ) “பாட்டி, என்ன இந்தப் பக்கம்?” என்று ஒருத்தி கேட்டாள். (ஆ) மாணவர்களே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். (இ) தம்பி, இங்கே வா. (ஈ) ஏய், அந்தப் பக்கம் போகாதே. |
1.1.19 கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்து |
| |