பக்கம் எண் :

9

 
 

(ஆ) இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், நல்ல உழைப்பாளிகள்.
 

1.1.9 அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் (ஒப்பு நோக்குக 15.1.5)
 

  (அ) அறையில் மண்டிக்கிடந்தது, இருள்.
(ஆ) அவன் திருமணம்செய்துகொண்டான், படித்த பெண்ணாகப் பார்த்து.
(இ) முற்றத்தில் அமர்ந்து வானத்தை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் தீர்மானித்தாள், மறுநாள்
சென்றுவிடுவதென்று.
 
1.1.10 ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் ‘இல்லையா’ ‘அல்லவா’ போன்ற சொற்களுக்கு முன்
 
  (அ) இயக்குநர் கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டார், இல்லையா?
(ஆ) அவர் உங்களுக்கு நிறைய உதவிகள் செய்தவர், அல்லவா?
 
1.1.11 ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத்தொடர்களுக்கு இடையில்
 
  (அ) அவன் சாப்பிடுவானோ, மாட்டானோ?
(ஆ) எப்படி எழுதுவீர்கள், மேசை அருகில் உட்கார்ந்தா, தரையில்
உட்கார்ந்தா?
(இ) உங்களுக்கு என்ன வேண்டும், டீயா, காப்பியா?
 
1.1.12 ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில்
 
  (அ) அவரைத் தடுக்காதே, போகவிடு.
(ஆ) “வா, போவோம்” என்று அவசரப்படுத்தினாள்.
 
1.1.13 எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்து
 


(அ தங்கையின் திருமணம், வருகிற 10ஆம் தேதி நடைபெறுகிறது.
(ஆ) அவர்கள், தங்கள் நண்பர்களுடன் மாலைப் பொழுதில் வந்து
தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு உட்கார்ந்துவிடுவார்கள்.
(இ) அவள், அவர்கள் வீட்டில் சில மாதங்களாக வேலைசெய்துவருகிறாள்.