பக்கம் எண் :

8

1.1.5 ஒரே சொல் அல்லது (மரபுத்தொடர் அல்லாத) தொடர் இரு முறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில்
 

(அ) பகுத்தறிவு, பகுத்தறிவு என்று ஒரு ...
(ஆ) அவள் வருவாள், வருவாள் என நான் எதிர்பார்த்திருந்தேன்.
(இ) போக வேண்டாம், போக வேண்டாம் என்று பல முறை சொல்லியும் அவள்
கேட்கவில்லை.
 

1.1.6 ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும், தொடர்களையும் அடுத்து
 

 

(அ) அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர், ஆனால்,
அவரால் மேடைகளில் சிறப்பாகப் பேச முடியாது.
(ஆ) நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அடுத்து, இரவு உணவிற்குத் தயாரானார்கள்.
(இ) குடிப்பழக்கத்தின் தீமையைப் பற்றிப் பேசுவார்.
இருந்தாலும், குடிப்பதை மட்டும் விடமாட்டார்.

(வாக்கியங்களிடையே தொடர்பு ஏற்படுத்த வரக்கூடியவை:
அடுத்ததாக,அடுத்து, அதற்கேற்ப, அதன்படி, அதனால், அது போலவே,
அது போன்றே, ஆகவே, ஆகையால், ஆயினும், ஆனாலும், இத்துடன்,
இரண்டாவதாக, இருந்தாலும், இவ்வாறாக, எடுத்துக்காட்டாக, என்றாலும்,
எனவே, எனினும், ஒருவழியாக, தவிரவும், பிறகு, பின்பு, பின்னால்,
முடிவாக, முடிவில், முதலாவதாக, முன் கூறியவாறு, மேலும்.)
 

1.1.7 வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்து
 

 

(அ) பொதுவாக, அவர் அரசியலில் ஈடுபாடுகொள்வதில்லை.
(ஆ) ஒருவேளை, அவர் சொல்வது போலவே நடந்துவிட்டால்
என்ன செய்வது?
(இ) குழந்தைசாமியைப் பொறுத்தவரையில், காந்தியடிகள் சொல்லியிருப்பதே
வேதவாக்கு.
 

1.1.8 ‘அதாவது’, ‘குறிப்பாக’ என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும்
 

 

(அ) சுரங்கத்திலிருந்து கருப்பு வைரத்தை, அதாவது நிலக்கரியை,
வெட்டியெடுக்கிறார்கள்.