பக்கம் எண் :

7

1. கால்புள்ளி (,)
 
1.1 கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:
 
1.1.1 ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில்



 

நீங்கள் வெளியிட்டிருந்த நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்தேன், ரசித்தேன்,
சிரித்தேன்.

1.1.2 ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும்


 

(அ) இசையுலகில் சாதி, மத, நிற வேறுபாடுகள் கிடையாது.
(ஆ) இனிமையான. பொருள் பொதிந்த, நெஞ்சை அள்ளும்
பாடல் ஒன்று காற்றில் மிதந்து வந்தது.
(இ) கொய்யாப்பழம் அளவுக்குப் பெரிய, பசபசவென்று
தேனாய்க் கசிகிற, சதைப்பிடிப்பு நிறைந்த பேரீச்சம்பழம்;
 

1.1.3 ஒரே வினையைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும்

 


 

அந்தப் பாடல் இனிமையாக, உள்ளத்திற்கு நிறைவளிப்பதாக,
கடந்த காலத்தை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.

1.1.4 தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் எண்களுக்கு இடையிலும்

 

 

(அ) தாய், மகள் இருவர் முகத்திலும் மலர்ச்சி
(ஆ) மீன், ரொட்டி, எலுமிச்சம்பழம், கோதுமை,
உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்க்கலாம்,
(இ) வேர்வை மிகுந்து வருதல், கண்கள் இருண்டுபோதல்,
கேள்விகளைச் சரிவரப் புரிந்துகொள்ள இயலாமை
ஆகிய இவையெல்லாம் ஆஸ்துமாவிற்கான அறிகுறிகள்,
(ஈ) நாங்கள் செய்ய நினைத்த திட்டங்களில் சில முன்னேற்றங்கள், சில
பின்னடைவுகள், சில எதிர்பாராத வெற்றிகள் இருந்தன.
(உ) 1970, 80, 90ஆம் ஆண்டுகளில் நடந்த மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி ...