பக்கம் எண் :

110

அதை எதிர்த்து அமைச்சர்கள் சிலரும் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலரும் குறுக்கிட்டனர்
என்றும் பொருள் தரும்படியான தொடரமைப்பைக் கொண்டிருக்கிறது. ‘முதல்வரை மகிழ்ச்சி
அடையச்செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில்’ என்ற தொடரை வாக்கியத்தில் இடம் மாற்ற
வேண்டும்.
 
சட்டப் பேரவையில் இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசத்
துவங்கியவுடன் முதல்வரை மகிழ்ச்சி அடையச்செய்ய
வேண்டும் என்ற ஆர்வத்தில் சில அமைச்சர்களும்...
 
    என்று அந்தத் தொடரை ‘சில அமைச்சர்களும்’ என்பதற்கு முன் அமைக்கலாம்.
அல்லது
 
  சட்டப் பேரவையில் இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசத்
துவங்கியவுடன் சில அமைச்சர்களும் ஆளும் கட்சி
உறுப்பினர்களில் ஒரு குழுவினரும் முதல்வரை மகிழ்ச்சி
அடையச்செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குறுக்கிட்டனர்.
 
          என்று ‘ஒரு குழுவினரும்’ என்பதற்குப் பின்னும் அமைக்கலாம். இந்த
இடமாற்றத்தால் சொல்ல வந்த கருத்து தெளிவாக உணர்த்தப்படுகிறது.
 
  (23) ஆண்டுதோறும் மறைந்த தி.ஜானகிராமன் நினைவாகக்
கூட்டம் ஒன்று நடைபெறும்.
 
   ‘தி. ஜானகிராமன் ஆண்டுதோறும் மறைந்தார்’ என்ற பொருள் தரும்படி இருப்பதைத்
தவிர்க்க ‘ஆண்டுதோறும்’ என்ற தொடரை ‘கூட்டம்’ என்பதற்கு முன் கொண்டுவர
வேண்டும்; அல்லது ‘மறைந்த’ என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும்.
 
  (24) இந்த மருத்துவமனையில் நோயாளிகளை நம்பி
விட்டுச்செல்லலாம்; கண்ணும் கருத்துமாகக்
கவனித்துக்கொள்வார்கள்.
  
‘நோயாளிகளைத் தயக்கமில்லாமல் இந்த மருத்துவமனையில் விட்டுச்செல்லலாம்’ என்று
பொருள் தர வேண்டிய இந்த வாக்கியம் அதனுடைய அமைப்பில் ‘நோயாளிகளை நம்பி
இந்த மருத்துவமனையில் வேறு யாரையோ விட்டுச்செல்லலாம்’ என நேர்மாறாகப் பொருள்
தருமாறு இருக்கிறது. ‘நோயாளிகளை’ என்பதை வாக்கியத்தின் தொடக்கமாக அமைத்தால்
நேர்மாறாகப் பொருள்கொள்ளும்படி இருக்காது.