பக்கம் எண் :

109

என்ற பொருளில் ‘தோள் கொட்டு’ என்பதும் ‘மார் தட்டு’ என்பதும் வழங்குகின்றன.
‘தோள் தட்டு’ என்று ஒரு தொடர் வழக்கில் இல்லை.
 
(20) 'எப்படியடா எழுதினாய்?' 'கொளுத்திக்கட்டிவிட்டேன்’
 
 இந்த உரையாடல் பகுதியில் பதிலாக வரும் வாக்கியத்தில் உள்ள ‘கொளுத்திக்கட்டி
விட்டேன்’ என்பது ‘கொளுத்திவிட்டேன்’, ‘வெளுத்துக்கட்டிவிட்டேன்’ என்னும் இரு
தொடர்களையும் ஒன்றாக்கியதன் விளைவாக ஏற்பட்ட செயற்கையான தொடர்.
  
1.2 உரிய இடத்தில் இல்லாத தொடர்கள்
 
     ஒரு வாக்கியம் வெளிப்படுத்தும் கருத்து தெளிவாக இருக்க வேண்டுமானால் அந்த
வாக்கியத்தில் உள்ள தொடர்கள் தவறாகப் பொருள் தருவதாகவோ ஒன்றுக்கு மேற்பட்ட
பொருள் தருவதாகவோ இருத்தல் கூடாது. தவறாகப் பொருள் தருவதையும் இரு
பொருள்பட இருப்பதையும் தக்க இடங்களில் நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துவதன் மூலம்
நீக்கலாம்; அல்லது தொடரை இடம் மாற்றுவதன் மூலமாகவும் நீக்கலாம்.
 
  (21) நபிகளின் உரையைக் கேட்டு அறியாமையில் மூழ்கியிருந்த உத்பா மெய்யறிவு பெற்றான்.
 
     மேற்காட்டிய வாக்கியம் ‘நபிகளின் உரையைக் கேட்டு உத்பா அறியாமையில் மூழ்கி’
என்று தவறாகப் பொருள்கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, இந்த
வாக்கியத்தை
    
     அறியாமையில் மூழ்கியிருந்த உத்பா, நபிகளின் உரையைக்
     கேட்டு மெய்யறிவு பெற்றான்.
 
     என மாற்றி அமைக்க வேண்டும்.
 
  (22) முதல்வரை மகிழ்ச்சி அடையச்செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சட்டப் பேரவையில் இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசத் துவங்கியவுடன் சில அமைச்சர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஒரு குழுவினரும் குறுக்கிட்டனர்.
 
     இந்த வாக்கியம் சட்டப்பேரவையில் இ.காங்கிரஸ் உறுப்பினர்கள் முதல்வரை மகிழ்ச்சி
அடையச்செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பேசத் தொடங்கினர் என்றும்