குளோரோஃபில்). சொல்லின் இடையில் வரும்போது ‘ல்ல்’ஆக எழுதப்படும் (million: மில்லியன்). 7. n: சொல்லின் முதலில் ‘ந’வாகவும் ஏனைய இடங்களில் ‘ன’வாகவும் எழுதப்படும் (Norway:நார்வே,California: கலிஃபோர்னியா, Japan: ஜப்பான்). 8. nd: இந்த இணையில் முடியும் நாட்டின் பெயர்கள் ‘ந்த்’ என எழுதப்படுவது மரபாக உள்ளது. (England: இங்கிலாந்து, Holland: ஹாலந்து). மற்ற சொற்களில் பெரும்பாலும் ‘ண்ட்’ என எழுதுவதே வழக்கமாக உள்ளது. (Grand Hotel: கிராண்ட் ஹோட்டல், Island Ground: ஐலண்ட் கிரவுண்ட்). 9. nt: இந்த இணையை ‘ன்ட்’ என எழுதுவது வழக்காக உள்ளது. ‘t’ என்பது ‘ட்’ என்ற வளைநா ஒலியாக (retroflex) இல்லாமல் ‘ற்’ என்பதுபோல அண்ண ஒலியாக (alveolar) இருப்பது காரணமாகலாம் (ventricle: வென்டிரிக்கிள்). ntr என வரும்போது இந்த ஒலி தெளிவாக உள்ளதால் central என்பது சென்ட்ரல் என்றே எழுதப்படுகிறது. 10. s: ச்/ஸ் என இரண்டும் பயன்படுகிற சொற்களில் ‘ஸ’வை நீக்கிவிட்டு ‘ச’வை ஏற்றுக்கொள்ளலாம். (ஸர்வீஸ் என்பதை சர்வீஸ் என்று எழுதுவது ஏற்புடையதே). ஆனால், sb, sc, sk, sp, st என வரும்போது ‘ஸ்’ என்றே எழுதப்படும் (lesbian: லெஸ்பியன், scale: ஸ்கேல், whisky: விஸ்கி, spartacus: ஸ்பார்ட்டகஸ், station: ஸ்டேஷன்). 11. t: ‘ட்’ என எழுதப்படுவது பெரும்பான்மை ஒரு சொல்லின் இடையில் இரண்டு உயிரொலிகளுக்கு நடுவே வரும்போது ‘ட்ட்’ ஆகவும் ‘te’ என முடியும்போது ‘ட்’ ஆகவும் எழுதப்படும் (monitor: மானிட்டர், nitrate: நைட்ரேட்), ‘t’ எனத் தொடங்கும் சில ஊர்ப் பெயர்கள் ‘த’வாக எழுதப்படும் (Tanzania: தன்ஸான்யா). ‘th’ என்பது ‘த்’ அல்லது ‘த்த்’ ஆக எழுதப்படும். (Thames: தேம்ஸ், Thailand: தாய்லாந்து, Lithuania: லித்துவேனியா). | (எழுத்துப்பெயர்ப்பில்) மேலும் சில சொற்கள் | | asprin bacteria carbohydrate delphin Empire house federation glycerine | - ஆஸ்பிரின் - பாக்டீரியா - கார்போஹைட்ரேட் - டெல்ஃபின் - எம்பயர் ஹவுஸ் - ஃபெடரேஷன் - கிளிசரின் | | |
|
|