1.2 பின்வரும் இடங்களில் கால்புள்ளி தேவை இல்லை. |
| |
1.2.1 தேதியைப் பின்வரும் முறைகளில் குறிப்பிடும்போது (ஒ.நோ. 1.1.23) |
| 23 மார்ச்சு 1986 1986 மார்ச்சு 23 |
1.2.2 முகவரியைப் பின்வரும் முறையில் எழுதும்போது (ஒ.நோ. 1.1.20) |
| உமா அச்சகம் 22 காளையார் கோயில் தெரு திருநெல்வேலி 627 006 |
2. அரைப்புள்ளி (;) |
| |
2.1 அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள்: |
| |
2.1.1 ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் |
| (அ) எல்லாப் பணிகளிலும் சமஸ்கிருதம் இடம்பெற்றது; சடங்குகள் இடம்பெற்றன; சம்பிரதாயங்கள் புகுந்தன. (ஆ) அமைச்சர்கள் இதை நம்பவில்லை; நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை; பத்திரிகையாளர்கள் வரவேற்கவில்லை. (இ) யானைகளில் வெள்ளையானை (ஐராவதம்) உயர்ந்தது; அருகம்புல்லில் வெள்ளருகு சிறந்தது; எருக்கில் வெள்ளெருக்கு உயர்ந்தது. |
2.1.2 காரணத்தையும் விளைவுகளையும் குறித்து வரும் முற்றுத்தொடர்களுக்கு இடையில் |
| (அ) 1988க்குப் பிறகு சோவியத் யூனியன் உடைந்தது; சோசலிசம் குலைந்தது; அமெரிக்கா ஏக ஆதிக்கம் பெற்ற நாடாக மாறியது. (ஆ) காந்தி சொன்னார்; கதர் அணிந்தோம். |
2.1.3 ‘ஒப்புமைப்படுத்துதல்’, ‘மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல்’ என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் |