பக்கம் எண் :

140

3.6 குறிப்பு

நூல், கட்டுரை முதலியவை எந்தத் தகவலுக்காக இங்கு காட்டப்பட்டுள்ளனவோ
அந்தத் தகவலுக்குத் தேவையான செய்திகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. இவ்வாறு
தேவையான, குறைந்த அளவு தகவலுடன் நூல், கட்டுரை முதலியவற்றை அடிக்குறிப்பிலும்
இறுதிக்குறிப்பிலும் காட்டலாம். ஆனால், துணைநூற்பட்டியலில் முழுமையான தகவல்கள்
தரப்பட வேண்டும். துணைநூற்பட்டியலில் நூல் குறித்த தகவல்கள் ஒரு வரிக்குக் கூடுதலாக
இருக்குமானால், கூடுதலான வரிகள் உள்ளடங்கி இருக்கும்படி அமைப்பது மரபாக
இருக்கிறது.
 
எடுத்துக்காட்டு:
     அழகிரிசாமி கு. 1977. தெய்வம் பிறந்தது, மூன்றாம் பதிப்பு (முதல் பதிப்பு 1960),
     சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.