|
| (அ) உயிர்ச்சத்துகள் (vitamins) (ஆ) இன்று இதழியல் (ஜர்னலிசம்) மிகப் பெரிய தொழில். |
13.1.4 தமிழில் எழுத்துப்பெயர்ப்புக்கும் மொழிபெயர்ப்புக்கும் மூலமான பிறமொழிச் சொல்லைக் காட்ட |
| (அ) டிரைடன் (Dryden), கேஸ்கொய்ன் (Gascoigne) போன்ற பல அறிஞர்கள் இதுபற்றி விரிவாகப் பேசியுள்ளனர். (ஆ) பொருள் அடுக்கமைப்பின் (stratification of meaning) அடிப்படையில்... |
13.1.5 மேற்கோளின் ஆதார நூல் மற்றும் அதன் விவரங்களைக் காட்ட (ஒ.நோ. 15.1.8) |
| (அ) ‘விண்ணை இடிக்கும் மலை இமயம்’ (பாரதி பாடல்கள், செந்தமிழ்நாடு, 9). (ஆ) மொழி செம்மையுற வேண்டியது எல்லாச் செயலுக்கும் முன் நிற்கிறது என்னும் கருத்துடையவர், கன்ஃபூசியஸ் (சுப்பையா, ஆனந்தவிகடன், 12.2.1967, பக். 25). |
13.1.6 நாடகம், சினிமா முதலியவற்றின் உரையாடல் பகுதிகளில் காட்சி அமைப்பு, பாத்திர வருணனை, நடிப்பு முறை முதலியவற்றுக்கான குறிப்புகளைக் காட்ட 13.1.7 |
| (அ) (நல்ல உயரமான ஒருவர், பஞ்சகச்ச வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம், நெற்றியில் திருநீறு இவ்வகை அலங்காரத்துடன் உள்பக்கத்திலிருந்து வருகிறார். இப்பகுதியில் ஒளி) (ஆ) பானுமதி; (நின்று கொண்டே) நீங்களே அவளுக்குச் சொல்லியனுப்பிவிட்டீர்களா? (இ) ஒளரங்கசீப்: (அங்கிருப்பவர்களிடம்) நீங்கள் போகலாம். (எல்லோரும் போகிறார்கள். ரோஷனாரா வருகின்றாள். ஓளரங்கசீப் தனக்கு வந்த கடிதத்தை அவளிடம் கொடுக்கிறான். அவள் அதைப் படிக்கிறாள்.) |
13.1.7 தொடர் முறையில் வரும் கதையின் அல்லது கட்டுரையின் இறுதியில் அது முடிவுபெற்றது அல்லது தொடர்கிறது என்பதைக் காட்டும் சொற்களை உள்ளடக்க |
| (தொடரும்) (முற்றும்) |