பக்கம் எண் :

24

 
  (அ) ஆமாம்’பா (ஆமாம் அப்பா)
 
12. மேற்படிக்குறி (“)
 
  ‘மேற்படி’ என்னும் பொருளைச் சுட்ட மேற்படிக்குறி பயன்படுத்தப்படுகிறது.
  துவரம்பருப்பு ஒரு கிலோ
உளுத்தம்பருப்பு “
அரிசி “
ரூ. 38
ரூ. 40
ரூ. 20
13. பிறை அடைப்பு ( )

13.1 பிறை அடைப்பு இட வேண்டிய இடங்கள்:

13.1.1 விரித்துக் கூறுதல், விளக்கிக் கூறுதல், கூடுதல் தகவல்
போன்றவற்றைக் குறிக்க வாக்கியத்துக்குள்
 
  (அ) யந்திர நாகரிகமும் பொருட்கவலையும் எல்லோரையும்
(செல்வர், வறியவர் என்ற வேறுபாடு இல்லாமல்) ஆட்டிப்படைக்கும் காலத்தில்
நாம் வாழ்கிறோம்.
(ஆ) மாண்டலின் இசைக் கலைஞர் உப்பாலப்பு (குடும்பப் பெயர்)
சீனிவாசனுக்கும் பாபுராவின் ஒரே மகள் ஸ்ரீக்கும்
திருப்பதியில் திருமணம் நடந்தது.
(இ) தெலுங்கு மரபுப்படி மாமியார் (காந்தம்மாள்)
மணப்பெண்ணை வரவேற்று மணமேடைக்கு
அழைத்துச்சென்றார்.
(ஈ) வெள்ளிக்கிழமை (மே 15) காலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
(உ) போதைப்பொருள் வைத்திருந்ததாக டென்னிஸ் வீராங்கனை (வயது 18)
போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
 
13.1.2 ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றைத் தமிழ் முறையில் எழுதும்போது
அவற்றிற்கு இணையான ஆங்கிலத் தேதியை உள்ளடக்கிக் காட்ட நிகழும்
பிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் 28ஆம் நாள் (11.6.99)
வெள்ளிக்கிழமை

13.1.3 தமிழ்ச் சொல்லை அடுத்துப் பிறமொழிச் சொல் தரப்படும்போது
பிறமொழிச் சொல்லைக் காட்ட