பக்கம் எண் :

23

 
  (ஆ) ‘அவர் உயிரோடு இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை
ஏற்பட்டிருக்காது’ என்று குரல் கம்மக் கூறினான்.
 
10.1.3 எழுதுபவர் தம் நோக்கில் ஒரு சொல்லையோ தொடரையோ தனித்துக்
காட்ட
 
  (அ) ‘எதிரி’ யார் என்று தெரியாமலா இது நடந்தது?
(ஆ) இவர்கள் ‘நவீன உலகச் சிற்பிகள்’ என்று அழைக்கப்பட்டனர்.
(இ) ‘ஏன் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
(ஈ) கணக்கில் நீ பெரிய ‘புலி’.
(உ) இதையெல்லாம் ‘ஒரு பேச்சுக்கு’ என்று எடுத்துக்கொள்ளாமல் நன்றாக
யோசித்துப்பாருங்கள்.
 
10.1.4 கட்டுரை முதலியவற்றில் சொல்லுக்கான வரையறை, கலைச்சொல்லைக்
குறிக்கும் பகுதி, மொழிபெயர்க்கப்பட்ட பகுதி போன்றவற்றைக் காட்ட
 
  (அ) நாவடக்கம் என்பது ‘பேசத் தகாததைப் பேசாதிருத்தல்’:
(ஆ) ‘ஏ’ என்னும் இடைச்சொல்
(இ) அமைப்பியல் ஆர்வலர்கள் இதை ‘பிரதி’ (text) என்று குறிப்பிடுகிறார்கள்.
 
10.1.5 சந்திப்பின்போது தெரிவிக்கும் சொற்கள், தலைப்பு, பழமொழி,
இலக்கிய மேற்கோள் ஆகியவற்றைத் தனித்துக் காட்ட
 
  (அ) ‘வணக்கம்... வணக்கம்’ என்று சொல்வது அவர் வழக்கம்.
(ஆ) இதுபற்றி ‘முருகன் அல்லது அழகு’ என்னும் நூலில்
விரித்துக் கூறப்பட்டுள்ளது.
(இ) ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பது உனக்கு நன்றாகத்
தெரிந்ததே.
(ஈ) ‘முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’ எனத்
திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
 
11. தனி மேற்கோள்குறி (‘)
 
  எண் அல்லது எழுத்து விடுபாட்டைக் குறிக்கத் தனி மேற்கோள்குறி
பயன்படுத்தப்படுகிறது.

(அ) 30 ஏப்ரல் ’99