|
| (ஆ) வாழ்க வாழ்க! |
8.1.8 முழக்கமிடப் பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது தொடர்கள் அடுத்தடுத்து வரும்போது ஒவ்வொன்றின் இறுதியிலும் (இறுதியில் வரும் தொடரின் பின் இரு முறைகூடப் பயன்படுத்தலாம்.) |
| (அ) கோழைகள்! துரோகிகள்!! (ஆ) உண்மை! முற்றிலும் உண்மை!! |
9. இரட்டை மேற்கோள்குறி (“ ”) |
| ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள்குறியை இட வேண்டும். (அ) “அது எப்படி?” என்றார் குப்புசாமி. (ஆ) “சினிமா பார்த்தால் தலைவலியெல்லாம் போய்விடும். வா, போவோம்” என்று வற்புறுத்தினாள். (இ) அடுத்த கணமே, “யார் கோபால்?” என்ற குரல் கேட்டது. (ஈ) “நான் செத்தால் நீ எப்படி அழுவாய்?” “முதலில் நீ செத்துக் காண்பி.” “நான் செத்துப்போன பின் நீ அழுவதை எப்படிப் பார்க்க முடியும்?” |
10. ஒற்றை மேற்கோள்குறி (‘ ’) 10.1 ஒற்றை மேற்கோள்குறி இட வேண்டிய இடங்கள்: 10.1.1 ஒருவரின் கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) வரும் இன்னொருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட |
| “களவியல் சங்க காலத்தைச் சார்ந்தது என்ற கருத்தையே இவர் ஏற்றுக்கொண்டு’ இதன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகாது’ என்கிறார்.” |
10.1.2 ஒருவரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் கூற்றைத் தனித்துக் காட்ட |
| (அ) பார்த்தவுடனேயே ‘இந்த வீட்டை வாங்கிவிட வேண்டியதுதான்’ என்று தீர்மானம்பண்ணிவிட்டேன். |