|
| (ஆ) ஆ! (இ) அட! (ஈ) சீ (உ) சே! (ஊ) ஐயோ! |
8.1.3 உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து |
| (அ) ஆஹா ஆஹா! (ஆ) ஐயோ ஐயோ! (இ) ஆ ஆ! |
8.1.4 கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும். |
| (அ) தீ! தீ! (ஆ) பாம்பு! பாம்பு! (இ) (அதோ) பார்! பார்! |
8.1.5 விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து (ஒ.நோ. 1.1.18) |
| (அ) உடன்பிறப்புகளே! (ஆ) அன்பர்களே! (இ) மகாராஜா! (ஈ) பாரத நாட்டில் பிறந்த மக்களே! |
8.1.6 வாழ்த்து, வசவு, வெறுப்பு முதலியவற்றைத் தெரிவிக்கும் வினையை அடுத்து |
| (அ) மணமக்கள் வாழ்க! (ஆ) நாசமாய்ப் போக! (இ) பணத்தைக் கொடுத்துத்தொலை! |
8.1.7 வியங்கோள் வினை இரட்டித்து வரும்போது இரண்டாவதாக வருவதை அடுத்து (அ) வருக வருக! |