|
| (அ) இன்னும் ஓரிரு மாதங்களில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்படும்?! (ஆ) அமெரிக்காவுக்கா போகிறீர்கள்?! (இ) உங்களால் இவ்வளவு சீக்கிரம் எப்படி வர முடிந்தது?! |
7.2 பின்வரும் இடங்களில் கேள்விக்குறி தேவை இல்லை. 7.2.1 அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் (இறுதி வினாவில் மட்டும் இடலாம்.) |
| (அ) டில்லிக்கு எப்படிப் போவீர்கள். ரயிலிலா, விமானத்திலா? (ஆ) இது படகா, இல்லை, மிதக்கும் வீடா? |
7.2.2 என, என்று, என்ற, என்பது ஆகிய சொற்களுக்கு முன் மேற்கோள்குறி இல்லாமல் வரும் வினாவை அடுத்து |
| (அ) தரம் எங்கே இருக்கிறது எனத் தேடிப்பார்க்க வேண்டிய ஒரு நிலை இன்று. (ஆ) மனநலனைச் சீர்ப்படுத்தும் சாதனம் என்ன என்று தேடுகின்றனர். (இ) இதைச் செய்யலாமா, வேண்டாமா என்ற கேள்விக்கு இடமே இல்லை. (ஈ) அவளுடைய திருமணம் எப்போது, யாரோடு என்பது யாருக்கும் தெரியாது. |
8. உணர்ச்சிக்குறி (!) 8.1 உணர்ச்சிக்குறி இட வேண்டிய இடங்கள்: 8.1.1 உணர்ச்சியை வெளிப்படுத்தும் வாக்கியங்களின் முடிவில் |
| (அ) எவ்வளவு பெரிய மலை! (வியப்பு) (ஆ) எதிர்பார்த்துக் காத்திருந்தபடியே அவளுக்குப் பதவிஉயர்வு கிடைத்தது! (மகிழ்ச்சி) (இ) மாலாவுடைய கணவன் விமான விபத்தில் இறந்துவிட்டான்! (அதிர்ச்சி) (ஈ) யாருடைய ஆதரவும் இன்றி அவர் எப்படிக் காலம்தள்ளப்போகிறார்! (இரக்கம்) (உ) எதிரே வரும் லாரி, பஸ்ஸின் மீது மோதிவிட்டால் என்ன ஆவது! (பயம்) (ஊ) இவனுக்கெல்லாம் வேலை ஒரு கேடு! (வெறுப்பு) |
8.1.2 உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லை அடுத்து |
| (அ) ஆஹா! |