பக்கம் எண் :

19

 
  (ஆ) அவனைப் பற்றிய ஒவ்வொரு நினைவும் துணுக்குத்துணுக்காய் நெஞ்சில்
கால் பதிக்கும் ...
(இ) அவனாகக் கண்டுபிடிக்கிறானா என்றுதான் பார்ப்போமே...
6.1.3 சொற்களின் ஒலிப்புத் தொடர்ச்சியைக் குறிக்க
 
  (அ) கைலாஷ் ... கைலாஷ்...
(ஆ) கொர்ர்...
(இ) ஸார், தந்தி ...
7. கேள்விக்குறி (?)

7.1 கேள்விக்குறி இட வேண்டிய இடங்கள்:

7.1.1 வினா வாக்கியத்தின் முடிவில்
 
  (அ) நேற்று என்னைத் தேடிவந்தவர் யார்?
(ஆ) மூன்று பேரிடமும் ஒரு ரூபாய் நோட்டு இருக்கிறதா?
(இ) அவர் ஒரு நாவலாசிரியர், அல்லவா?
(ஈ) கணினியின் பயன்கள் எவை?
(உ) நேற்றுக் கலவரம் நடந்தது பம்பாயில்தானே?
(ஊ) இன்றும் மழை பெய்யுமோ?
(எ) அவள் இன்னும் ஏன் வரவில்லை?

 

7.1.2 ஐயம், நம்பிக்கையின்மை ஆகியவை தொனிக்கும் வாக்கிய முடிவில்
 
  (அ) சிபாரிசு இல்லாமல் வேலை கிடைக்கும்?
(ஆ) இன்னும் ஓரிரு மாதங்களில் காவேரிப் பிரச்சினைக்குத் தீர்வு
காணப்படும்?
 
7.1.3 வினாக் குறிப்பு அடங்கிய, முற்றுப்பெறாத வாக்கியத்தின் முடிவில்
 
  (அ) தானியாவின் கதி...?
(ஆ) நாங்கள் சினிமாவுக்குப் போகிறோம். நீங்கள் ...?
 
7.1.4 வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும்
உணர்ச்சிக்குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.