பக்கம் எண் :

27

15.1.2 வாக்கியங்களை இணைக்கும் ‘என்று’, ‘என்பது’ போன்ற சொற்களைத் தவிர்க்கும் போது
 
  (அ) ‘நல்ல நிறுவனமாகப் பார்த்து வேலைக்குச் சேர வேண்டும் என்று நினைத்ததில் என்ன தப்பு?’ - குப்புசாமியின் மனதில் எழுந்த கேள்வி. (- = என்பது)
(ஆ) “வாடா, போவோம்” - அந்த அம்மாள் முத்துவைத் தூக்கி வேனில் உட்காரவைத்தாள். (- = என்று கூறி)
(இ) “என்னா, தம்பி, நீ அநாதையா ?” - யாரோ கேட்க “ஆமாம்” என்றான். (- = என்று)
 
15.1.3 ஒரு வாக்கியத்தின் இடையே செருகப்படும் மற்றொரு தொடரின் முன்னும் பின்னும்
 
  (அ) அம்மா வைத்துள்ள மெழுகுவர்த்தியை - துண்டானாலும்
பரவாயில்லை - எடுத்துக்கொள்ளுங்கள்.
(ஆ) அவர்களின் காதலில் ஏதோ ஒரு செயற்கைத்தனம் - சினிமாத்தனம் - பளிச்சிடுகிறது.
(இ) அப்போது, சுப்பிரமணியம் - சரளாவின் அப்பா - தமக்குள்ளேயே ஏளனமாக முணுமுணுத்துக்கொண்டார்.
(ஈ) ஜெனரல் ஆஸ்பத்திரியில் - அதுவும் இலவச வார்டில்- அவளைக் கொண்டுவந்து போட்டுவிட்டாராம்.
 
15.1.4 தனி வாக்கியங்களுக்கு இடையில் உள்ள இலக்கண உறவைக் காட்டும் சொல்லுக்குப் பதிலாக
 
  (அ) உங்கள் பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழிமுறை சொல்கிறேன் - சரியென்று தோன்றினால் பின்பற்றிப் பாருங்கள். ( - = அது)
(ஆ) அவள் வரலாம், வராமலும் இருக்கலாம் - யாருக்குத் தெரியும்? (- = அது)
(இ) அவர் சிகரெட் பிடிக்கிறாரா - என்னால் நம்ப முடியவில்லையே! ( - = அதை)
 
15.1.5 இயல்பான வாக்கிய அமைப்பை மாற்றி அமைக்கும்போது பெரும்பாலும் பயனிலைத் தொடரை முதலில் தரும்போது அந்தத் தொடரின் பின் (இந்த இடங்களில் இணைப்புக்கோட்டுக்குப் பதிலாகக் கால்புள்ளியைப் பயன்படுத்துவதே மிகுதி.)
 
  (ஒ.நோ. 1.1.9)

(அ) அவன் முடிவெடுத்தான் - எந்த நிலையிலும் தன்