பக்கம் எண் :

28

 
  பெற்றோரின் பணத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று.
(ஆ) சகோதரிகள் இருவரும் ஒன்றும் பேசாமல் நேரே
தெருவாசலுக்கு வந்தார்கள் - வீட்டில் அன்று
நடந்ததைப் பற்றித் தனியே இருந்து பேசுவதற்கு.
 
15.1.6 ‘இடையில்’ என்னும் பொருளில் இரு சொற்களை இணைத்துக் காட்ட
 
  (அ) இஸ்ரேல் - பாலஸ்தீனம் புதிய ஒப்பந்தம் (இஸ்ரேலுக்கும்
பாலஸ்தீனத்துக்கும் இடையில்)
(ஆ) அந்த சினிமா இப்போது இயக்குநர் - நடிகை உறவால் முடங்கிப்போய்க்
கிடக்கிறது.
(இ) சென்னை - கன்னியாகுமரி விரைவுப் பேருந்து
 
15.1.7 ‘முதல் ... வரை’ என்னும் பொருள் தரும் முறையில் இரு
இலக்கங்களுக்கு இடையில்
 
  சங்ககாலம்: கி.மு. 300 - கி.பி. 200
வேலை நேரம்: 9.30 - 5.30
 
15.1.8 மேற்கோளுக்கும் நூலின் பெயர் அல்லது ஆசிரியரின் பெயருக்கும்
இடையில் (ஒ.நோ. 13.1.5)
 
  (அ) ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்’ - குறள்
(ஆ) ‘எங்கள் பாரத தேசம் என்று தோள்கொட்டுவோம்’ - பாரதியார்
 
15.1.9 சொற்களையும் தொடர்களையும் ‘என்னவென்றால்’ அல்லது
‘எதுவென்றால்’ என்னும் பொருளில் தொடர்புபடுத்த (ஒ.நோ. 3.1.1)
 
  (அ) சுஸ்மிதாவின் மிகப் பெரிய பலம் - அவரது நிதானமான தன்மையும்
வேகமாகச் செயல்படும் மூளைத்திறனும்தான்.
(ஆ) பெயர் - அம்பிகா
ஊர் _ திருவனந்தபுரம்
 
15.1.10 சொற்களையும் தொடர்களையும் ‘என்பது’ என்னும் பொருளில்
தொடர்பு படுத்த (ஒ.நோ. 3.1.3)