பக்கம் எண் :

29

 
  (அ) நீதிமன்றம் - நாம் பெறவேண்டிய நீதியின் உறைவிடம்
(ஆ) நீலகிரி - மிகச் சிறந்த எரிவாயு அடுப்பு
 
15.1.11 ஒரு இடப்பெயரையும் அதோடு தொடர்புபடுத்த வேண்டிய ஒரு
விவரத்தையும் இணைத்துக் காட்ட (ஒ.நோ. 3.1.8)
 
  (அ) கோயம்புத்தூர் - தொலைபேசி: 435762 (கோயம்புத்தூரில்)
(ஆ) உதகமண்டலம் - 10 மி.மீ. மழை (உதகமண்டலத்தில்)
 
16. இணைப்புச் சிறுகோடு ( - )
16.1 இணைப்புச் சிறுகோடு இட வேண்டிய இடங்கள்:
16.1.1 ஏதேனும் ஒரு காரணத்தின் அடிப்படையில் இருவேறு சொற்களை
ஒன்றாகத் தொடுத்து ஒரு அலகாகக் காட்ட அவற்றின் இடையில்
 
  (அ) வினாடி-வினா நிகழ்ச்சி
(ஆ) பிரபலமான ஃபிரான்ஸ்-அராபிய கூட்டுக் கம்பெனி
(இ) கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்
(ஈ) திரையரங்கில் பகல்-இரவுக் காட்சிகள்
 
16.1.2 சுருக்கப்பட்ட சொல்லின் முதல் எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும்
இடையில்
 
  (அ) எ-டு (எடுத்துக்காட்டு)
(ஆ) உ-ம் (உதாரணம்)
(இ) தி-லி (திருநெல்வேலி)

(முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எடுத்துச் சுருக்கெழுத்தாகத் தருவது
குறைந்து வருகிறது.)
 
16.1.3 தொலைபேசி முதலியவற்றில் தனித்தனிக் கூறுகளாகக் காட்ட
வேண்டிய தொகுதி எண்களுக்கு இடையில்
 
  (அ) தொலைபேசி: 044-6264029
(ஆ) தொலை அச்சு: 041-7575
(இ) தொலை நகல்: 91-044-830380