பக்கம் எண் :

30

 
  (இணைப்புச் சிறுகோடு இடுவது மிகுதி என்றாலும் பிறை அடைப்பிற்குள்
எண்களைத் தருவதும் உண்டு.)
 
16.1.4 ஒரு வரியின் முடிவில், இடம் இல்லாததன் காரணமாக ஒரு
சொல்லைப் பிரிக்கும்போது முதல் பிரிவை அடுத்து
 
  அதைக் கண்டித்து பகிரங்கமாக அறிக்கைகள் வெளியிட்டார்கள்.

(சொல் பிரிப்பைக் காட்டுவதற்காகச் சிறுகோடு இடும் முறை அரிதாகவே
காணப்படுகிறது. இந்தக் கையேட்டில் இந்த முறை பின்பற்றப்படவில்லை.)
 
16.2 பின்வரும் இடங்களில் இணைப்புச் சிறுகோடு தேவை இல்லை.

16.2.1 எண்ணின் உட்பிரிவாக வரும் எழுத்துக்கு முன்னும் எழுத்தின்
உட்பிரிவாக வரும் எண்ணுக்கு முன்னும்
 
  (அ) 10 B, பீமண்ண தோட்டத் தெரு
பேருந்து எண் 6 A
(10-B, 6-A என்று தருவதைத் தவிர்க்கலாம்.)
(ஆ) T 14
ஏ 4
(T-14, ஏ-4 என்று தருவதைத் தவிர்க்கலாம்.)

16.2.2 ஊர்ப் பெயருக்கும் அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கும் இடையில்
 
  ஈரோடு 638 001
(ஈரோடு - 638 001 என்பதைத் தவிர்க்கலாம்.)
 
17. சாய்கோடு (/)

17.1 சாய்கோடு பயன்படுத்தப்படும் இடங்கள்:

17.1.1 ஒன்றுக்குப் பொருத்தமான சில மாற்றுகளைத் தரும்போது அவற்றுக்கு
இடையில்