பக்கம் எண் :

31

 
  (அ) விண்ணப்பதாரரின் தாய்மொழியாகத் தமிழ்/மலையாளம்/இந்தி இருத்தல்
வேண்டும்.
(ஆ) அதிகபட்ச வெப்பம் 104F//40C
 
17.1.2 சில சுருக்கக்குறியீட்டு எழுத்துக்களுக்கு இடையில்
 
  மே/பா (மேற்பார்த்து)
த/பெ (தந்தையின் பெயர்)
 
17.1.3 அலுவலகக் கடிதங்களில் கடிதம் குறித்த விவரக் குறிப்புகளுக்கு
இடையில்
 
  அரசாணை எண்: 12/பணி நியமனம் குறித்து/ நாள்: 19.10.2000
 
17.1.4 பணத் தொகையைக் குறிக்கும் எண்ணை அடுத்து
 
  ரூ. 2500/-
ரூ. 2500/=

(மேலே காட்டியவாறு சாய்கோட்டை அடுத்து இணைப்புச் சிறுகோட்டையோ
சமக்குறியையோ பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது.)

17.2 பின்வரும் இடத்தில் சாய்கோடு தேவை இல்லை.

17.2.1 ‘மற்றும்’ என்னும் பொருள் தரும்படியாக அடுக்கி வரும் சொற்களுக்கு
இடையிலும் தொடர்களுக்கு இடையிலும்
 
  அந்த ஊரில் விடுதி, பேருந்து வசதி உண்டு.

(விடுதி/பேருந்து என்று எழுதுவதைத் தவிர்க்கலாம்.)
 
18. அடிக்கோடு (_)
 
  சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டிய வாக்கியத்தையோ
வாக்கியங்களையோ குறிக்க அடிக்கோடு பயன்படுத்தப்படுகிறது.